பூனையை வைத்து எடுக்கப்படும் படம்!

நாய், மீன், புலியை தொடர்ந்து பூனை நடிக்கும் படம்!

செய்திகள் 5-Aug-2016 10:38 AM IST VRC கருத்துக்கள்

நாய், மீன், புலி முதலானவற்றை முக்கிய பாத்திரங்களாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படங்களின் வரிசையில் பூனையை வைத்து ஒரு படம் எடுக்கப்பட்டு வருகிறது. ‘மியாவ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ‘குளோபல் வுட்ஸ் மூவீஸ்’ சார்பில் வின்சென்ட் அடைக்கலராஜ் தயாரிக்கிறார். இவர் ‘பாரத ரத்னா’ சத்யஜித் ரேயின் ‘டார்கெட்’ படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ‘பெர்சியன் கேட்’ எனப்படும் பூனையை நடிக்க வைக்கிறது. அறிமுக இய்க்குனர் சின்னாஸ் பழனிசாமி இயக்கும் ‘மியாவ்’ படத்திற்கு இசை அமைக்கும் பொறுப்பை ஸ்ரீஜித் இடவானோ ஏற்றுள்ளார். ‘சத்தம் போடாதே’ பட ஒளிப்பதிவாளர் போஜன் கே தினேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

‘செல்பி’ என பெயரிடப்பட்ட சாதுவான பூனையானது நான்கு இளைஞர்கள் ஏற்படுத்தும் இன்னல்களால் வெகுண்டு எழுந்து அவர்களுக்கு தொல்லைகள் கொடுக்கிறது. அது ஏன், எத்றகாக? எனப்து தான் ‘மியாவ்’ படத்தின் ஒரு வரி கதை என்கிறார் இப்படத்தை இயக்கும் சின்னாஸ் பழனிசாமி. இப்படத்தில் கிராஃபிக்ஸுக்கும் அதிக முக்கியத்துவம் உண்டாம். எது நிஜ காட்சிகள், எது கிராஃபிக்ஸ் காட்சிகள் என்று கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு கிராஃபிக்ஸ் வேலைகள் படு நேர்த்தியாக இருக்கும் என்று கூறும் தயாரிப்பாளர் வின்சென்ட் அடைக்கல ராஜ் மேலும் இப்படம் குறித்து கூறுகையில் ‘இப்படம் செல்ல பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு சமர்ப்பணம்’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;