‘எந்திரன் 2’, ‘AK 57’, ‘விஜய் 60’ ரிலீஸ் எப்போது?

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் எந்திரன் 2, ஏகே 57, விஜய் 60 ஆகிய படங்களை எப்போது ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்?

செய்திகள் 6-Aug-2016 12:04 PM IST Chandru கருத்துக்கள்

ஹாலிவுட்டில் ஒரு படத்தின் அறிவிப்பு வெளிவரும்போதே, அதன் ரிலீஸ் தேதியையும் முன்கூட்டியே அறிவித்துவிடுவார்கள். இந்த பாணியை தமிழ் சினிமாவில் பின்பற்றிய ஒருவர் நடிகர் விஷால். அவரின் தயாரிப்பில் வெளிவந்த படங்கள் பெரும்பாலும் ரிலீஸ் தேதியை ஆரம்பத்திலேயே அறிவிக்கப்பட்டவைதான். ஆனால், பெரிய படங்களின் ரிலீஸ் தேதி பெரும்பாலும் சஸ்பென்ஸாகவே வைக்கப்பட்டிருக்கும். இருந்தபோதும், சில முக்கிய விநியோகஸ்தர்களும், திரைப்படத்துறையைச் சார்ந்தவர்களும் பெரிய படங்கள் எப்போது வெளியாக வாய்ப்பிருக்கின்றன என்பதை கிட்டத்தட்ட சரியாக கணித்துவிடுவார்கள். அந்த கணிப்பின் அடிப்படையில் தற்போது உருவாகிவரும் 3 முக்கிய படங்களின் ரிலீஸ் தேதி நமக்கு கிடைத்துள்ளது.

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘விஜய் 60’ படத்தை 2017ஆம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்களாம். போக்கிரி, ஜில்லா போன்றவை ஏற்கெனவே பொங்கலுக்கு வெளியான படங்கள் என்பதால், அந்த சென்டிமென்டை இப்படத்திலும் தொடர்வதாகக் கேள்வி.

அடுத்தது, சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் அவரின் 57வது படம்.... ஆடிப் பெருக்கென்று படப்பிடிப்பை துவக்கிய இப்படம் 2017ஆம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்தின் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜனே ‘AK 57‘’ படத்தை ஏப்ரலில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம் என அறிவித்துள்ளார்.

கடைசியாக... ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘எந்திரன் 2’. இப்படத்தில் பாலிவுட் ஹீரோ அக்ஷய்குமார் வில்லனாக நடித்திருப்பதால், வட இந்தியாவிலும் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ‘கபாலி’யின் வசூல் ரெக்கார்டை முறியடிக்க சாத்தியமுல்ல ஒரே படமாக கருதப்படும் ‘எந்திரன் 2’ 2017ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;