கதாசிரியர், இயக்குர் ‘வியட்நாம் வீடு’ சுந்தரம் காலமானார்!

‘வியட்நாம் வீடு’ சுந்தரம் காலமானார்!

செய்திகள் 6-Aug-2016 3:32 PM IST VRC கருத்துக்கள்

கதாசிரியர், நடிகர், இயக்குனர், வசனகர்த்தா என பல முகங்களை கொண்ட கலைஞர் ‘வியட்நாம் வீடு’ சுந்தரம். 73 வயதான ‘வியட்நாம் வீடு’ சுந்தரம் நேற்று இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானான்ர். இவரது உண்மையான பெயர் கே.சுந்தரம். சிவாஜி நடித்த ‘வியட்நாம் வீடு’ படத்தில் கதாசிரியராக பணிபுரிந்ததால் ‘வியட்நாம் வீடு’ சுந்தரம் என்று அழைக்கப்பட்டு வந்தார். சிவாஜி நடிப்பில் ‘கௌரவம்’, ‘ஞானப்பறவை’ ஆகிய படங்களை இயக்கிய இவர் எம்.ஜி.ஆர்., ரஜினிகாந்த், கமல், கார்த்திக் நடித்த படங்களிலும் பணியாற்றியுள்ளார். சமீபகாலமாக சினிமாவிலிருந்து விலகி சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் புகழ்பெற்று விளங்கியவர்களில் இவரும் ஒருவர்! இவரது மறைவு தமிழ் சினிமாவுக்கு பெரும் இழப்பாகும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;