முதல் ஷெட்யூலை முடித்த விஜய்சேதுபதி, மடோனா!

அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தயாராகும் விஜய்சேதுபதி, மடோனா!

செய்திகள் 8-Aug-2016 1:07 PM IST VRC கருத்துக்கள்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. 23 நாட்கள் தொடர்ந்து நடந்த இப்படப்பிடிப்பில் விஜய்சேதுபதியுடன் கதாநாயகியாக நடிக்கும் மடோனா செபாஸ்டியனும் கந்து கொண்டு நடித்துள்ளார். ‘காதலும் கடந்துபோகும்’ படத்தை தொடர்ந்து மீண்டும் இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளார் மடோனா! ‘அனேகன்’ படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் இப்படத்தையும் அனேகனை தயாரித்த ‘ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமே தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியனுடன் ஒரு முக்கிய கேரக்டரில் டி.ரஜேந்தரும் நடிக்கிறார். சுபா திரைக்கதை வசனம் எழுதும் இப்படத்திற்கு’ ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைக்கிறார். அபிநந்தன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;