ஹாலிவுட்டில் தயாராகும் கோலிவுட் படம்!

ஷாம் நடிப்பில் ஹாலிவுட்டில் தயாராகும் காவியன்!

செய்திகள் 16-Aug-2016 3:46 PM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு முழுப் படமுமே அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லாஸ் வேகாஸ் நகரங்களில் படமாக உள்ளது. ’காவியன்’ என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் ஷாம் கதாநாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குனர் சாரதி இயக்கும் இப்படத்தின் தொடர் 45 நாட்கள் படப்பிடிப்புக்காக நாளை (17-8-16) அமெரிக்கா செல்கின்றனர் ‘காவியன்’ படக்குழுவினர். தமிழ் தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் இப்படம் உருவாகவிருக்கிறது. இப்படத்தில் அமெரிக்காவில் நடிகையாக இருக்கும் ஸ்ரீதேவி குமார் ஒரு கதாநாயகியாக நடிக்க, இன்னொரு நாயகியாக ‘மனம் கொத்தி பறவை’ படதிதில் நடித்த ஆத்மியா நடிக்கிறார். இரண்டு நாயகிகளுக்கும் சமமான வகையில் இப்படத்தின் கேரக்டர்களும் கதையும் அமைக்கப்பட்டுள்ளதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பார்ட்டி அனிமல் கேங் -1 டீஸர்


;