ஸ்ரீகாந்தின் ‘நம்பியாரி’ல் ஆர்யா, விஜய் ஆன்டனி, பார்வதி ஓமனக்குட்டன்!

‘நம்பியார்’ குறித்து ஸ்ரீகாந்த்!

கட்டுரை 16-Aug-2016 4:02 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நம்பியார்’. வருகிற 19- ஆம் தேதி ரிலீசாகவிருக்கும் இப்படத்தை வெளியிடவிருப்பது ஸ்ரீகாந்தின் சொந்த நிறுவனமான ‘கோல்டன் ஃப்ரைடே ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தான்! ‘நம்பியார்’ படம் சம்பந்தமாக ஸ்ரீகாந்த் அளித்தன் ஒரு சிறு பேட்டி இது:

’நம்பியார்’ என்ன சொல்ல வருகிறது?

சினிமாக்களில் நல்லது செய்பவர் எம்ஜிஆர். கெட்டது செய்பவர் நம்பியார். இது எல்லா சினிமா ரசிகர்களுக்கும் தெரியும். எம்.ஜி.ஆருக்கு வில்லங்கம் செய்பவர் நம்பியார். அதுபோலவே ஒவ்வொரு மனிதனின் மனதிலும் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. இரண்டும் கலந்த கூட்டணி தான் மனிதனின் மனது. ஒரு பக்கம் நல்ல சிந்தனைகள் மேலோங்கும்போது கெட்ட சிந்தனைகள் அதனைக் கெடுக்க முயற்சிக்கும். அதனால் நமக்குள்ளேயே எம்.ஜி.ஆரும் இருக்கிறார், நம்பியாரும் இருக்கிறார். அதை தான் இப்படம் சொல்ல வருகிறது. சொல்கிறோம்.

இப்படத்தில் சந்தானம் கூட நடித்த் அனுபவம்?

நிறைய சுவராஸ்யங்கள் இருக்கின்றன. படம் முழுக்க சந்தானம் இருப்பார். படத்தின் ஒரு முக்கிய பகுதியில் திரையில் நான் பேசுவேன். ஆனால் சந்தானத்தின் குரலில். அதாவது எனக்குள்ளிருக்கும் நம்பியார் எம்.ஜி.ஆரை டாமினேட் செய்யும் இடம் அது. அந்த கான்செப்டே சந்தானத்துக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரையே ஒரு பாடலையும் பாட வைத்தோம். சாதாரண மனிதன் பாடுவதற்கும் குடிபோதையில் பாடுவதற்கும் ஒரு வித்தியாசம் இருக்குமே, அதனை அச்சு அசலாக அப்படியே கொண்டு வந்துள்ளார் சந்தானம்.

‘நம்பியாரி’ல் ஆர்யா, விஜய் ஆண்டனி கூட இருக்காங்களாமே?

ஆமாம்! படத்தில் ‘ஆற அமர..’ என்ற ஒரு முக்கிய பாடலின் செட் பற்றி தெரிந்துகொண்ட விஜய் ஆண்டனி அந்த பாடலைப் பார்க்க ஆசைப்பட்டு செட்டுக்கு வந்தார்.அவரையும் சின்ன மூவ்மெண்ட் போடவைத்து உள்ளே இழுத்தோம். கதையில் ஒரு நண்பர் வந்து உதவுவார். அதற்கு உண்மையாகவே என்னுடைய நண்பர் ஆர்யாவையே கூட்டி வந்தோம். ஆர்யா என் பள்ளி நண்பன். ஆர்யா பற்றி ஒரு விஷயம் சொல்லியே ஆகவேண்டும். இப்படத்தில் நடித்து முடித்த பின், நான் மிகவும் தயங்கியபடியே, ‘‘நண்பா… ரொம்ப தேங்க்ஸ்… பேமெண்ட் எவ்வளவு…?’’ என்று கேட்டேன். பதிலுக்கு ஆர்யா எனக்கு விட்ட டோஸை ஓப்பனாக சொல்ல முடியாது. ஆர்யாவுக்கு ஜோடியாக பார்வதி ஓமனக்குட்டன் வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் தயாரிப்பீர்களா?

நிச்சயமாக… புதியவர்களுக்கும் திறமையானவர்களுக்கும் வாய்ப்பு கொடுப்போம். எங்களுக்கு பணம் முக்கியமில்லை. முதலீடு வந்தால் கூட போதும். ரசிகர்களுக்கு நல்ல படங்களைக் கொடுக்க ஆசைப்படுகிறோம். அதனை தீர்மானிக்கப்போவது ரசிகர்கள் தான். அவர்கள் ‘நம்பியாரு’க்கு தரவிருக்கும் ஆதரவுதான் எங்கள் பலம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;