ஏழை, எளிய மக்களுடன் பிறந்த நாள் கொண்டாடும் விஷால்!

பிறந்த நாளை முன்னிட்டு சமூக பணியில் ஈடுபடும் விஷால்!

செய்திகள் 26-Aug-2016 3:02 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் இளவரசன் என்ற ஒரு துணை நடிகர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இந்த செய்தியை ஒரு நாளிதழ் மூலம் தெரிந்துகொண்ட நடிகர் விஷால், அவரது தற்கொலை முயற்சிக்கான காரணங்களை தெரிந்துகொண்டு அவரது மருத்துவ செலவிற்காக தனது தேவி அறக்கட்டளை மூலம் 10,000 ரூபாய் வழங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் துணை நடிகரான இளவரசனின் கோரிக்கைகளை நடிகர் சங்கம் மூலம் உடனடியாக நிறைவேற்ற தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.

இப்படி பல பேருக்கு தன்னால் இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்து வரும் விஷால் வருகிற 29ஆம் தேதி தனது பிறந்த நாளை முன்னிட்டு அனாதை இல்லம, முதியவர்கள் இல்லம், அரசு பள்ளிக்கூடம், அரசு மருத்துவமனை என பல இடங்களில் உதவிகள் செய்து தனது பிறந்த நாளை அர்த்தமுள்ளதாக்க திட்டமிட்டுள்ளார். பிறந்த தினத்திற்கு முந்தைய தினமான 28-ஆம் தேதி தனது ரசிகர் மன்றத்தினர் நடத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் விஷால் கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை செய்யவிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;