‘நாகேஷ் திரையரங்க’த்தில் ஆரி, பானுப்ரியா!

ஆரி நடிக்கும் நாகேஷ் திரையரங்கம்!

செய்திகள் 27-Aug-2016 2:16 PM IST VRC கருத்துக்கள்

‘நெடுஞ்சாலை’, ‘மாயா’ முதலான படங்களின் மூலம் அதிக கவனம் பெற்ற நடிகர் ஆரி, தற்போது ‘மானே தேனே பேயே’, ‘கடை எண் 6’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் தவிர அறிமுக இயக்குனர் முகமது இசாக் இயக்கும் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்திலும் நடிக்கவிருக்க்கிறார் ஆரி! சென்னை பாண்டி பஜாரில் இயங்கி வந்த நாகேஷ் திரையரங்கம் கடந்த 2008-ஆம் ஆண்டு திருமண மண்டபமாக மாற்றபட்டு விட்டது. இதுபோன்று பல திரையரங்கங்கள வணிக வளாகங்களாகவும், திருமண மண்டபங்களாகவும் மாறியுள்ள நிலையில் நாகேஷ் திரையரங்கத்தை பின்னணியாக வைத்து இப்படம் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ஆரி ரியல் எஸ்டேட் ஏஜென்டாக நடிக்கிறாராம். முன்னாள் கதாநயகி நடிகையான பானுப்ரியா ஆரிக்கு அம்மாவாக நடிக்கிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உறியடி 2 - டீஸர்


;