பொங்கல் ரிலீஸில் ‘விஜய் 60’ உடன் மல்லுக்குத் தயாராகும் சிம்பு படம்?

2017 பொங்கல் ரிலீஸில் விஜய் 60 படத்துடன் சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படமும் களமிறங்குகிறதாம்

செய்திகள் 29-Aug-2016 11:47 AM IST VRC கருத்துக்கள்

‘தெறி’ படத்தைத் தொடர்ந்து தற்போது பரதன் இயக்கத்தில் தனது 60வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். திருநெல்வேலியை கதைக்களமாகக் கொண்டு உருவாகிவரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 60% மேற்பட்ட படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்ட இப்படத்தை 2017 பொங்கல் ரிலீஸாக வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், லேட்டஸ்ட்டாக கிடைத்த தகவல் ஒன்றின்படி இதே பொங்கல் தினத்தைக் குறிவைத்தே சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படமும் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் இப்படத்தில் ஸ்ரேயா, விடிவி கணேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், ராஜேந்திரன் உட்பட பலர் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நவம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடையும் எனத் தெரிகிறது. அதன் பிறகு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை விறுவிறுப்பாக முடித்துவிட்டு, பொங்கல் ரிலீஸாக களமிறக்கத் திட்டமிட்டிருக்கின்றதாம் படத் தயாரிப்பு நிறுவனமான குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;