ஐஸ்வர்யா தனுஷுக்கு ஐ.நா.அமைப்பின் கௌரவ பதவி!

ஐஸ்வர்யா தனுஷுக்கு ஐ.நா.அமைப்பின் கௌரவ பதவி!

செய்திகள் 30-Aug-2016 10:44 AM IST VRC கருத்துக்கள்

ரஜினிகாந்தின் மூத்த மகளும், தனுஷின் மனைவியும், திரைப்பட இயக்குனருமான ஐஸ்வர்யா தனுஷ் ஐ.நா.அமைப்பின் இந்தியாவிற்கான தூதராகிறார் என்ற தகவல் ஓரிரு நாட்களுக்கு முன் வெளியானது. இந்த தகவலை நேற்று சென்னையில் நடந்த ஒரு விழாவில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஐஸ்வர்யா தனுஷ், பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்கான ஐ.நா.அமைப்பின் இந்தியாவிற்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உலகநாடுகள் கூட்டமைப்பின் துணை பொது செயலாளர் மற்றும் உலக நாடுகளின் பெண்கள் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் லட்சுமி பூரி பிறப்பித்துள்ளார். ஐஸ்வர்யா தனுஷ் பெண்களுக்கான சம உரிமை மற்றும் அவர்களின் முன்னேற்றம் பற்றிய விழிப்புணர்வை இந்தியா முழுவதும் உள்ள மக்களுகுக்கு எடுத்து கூற உள்ளார். ஆண் ,பெண் இரு பாலருக்கும் சமமான உலகை 2030-க்குள் உருவாக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு ‘பிளானெட் 50-50’ என பெயரிடப்பட்டுள்ளது. நேற்று சென்னையைல் நடந்த இந்த விழாவில், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், லதாரஜினிகாந்த் முதலானோர் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;