ஜோஷ்வா ஸ்ரீதருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு!

‘பறந்து செல்லவா’ படக்குழுவினருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு!

செய்திகள் 2-Sep-2016 10:33 AM IST VRC கருத்துக்கள்

நடிகர் நாசரின் மகன் லுத்ஃபுதீன் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘பறந்து செல்லவா’. தன்பால் பத்மநாபன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜோஷ்வா ஸ்ரீதர் இசை அமைத்துள்ளார். ஜோஷ்வா ஸ்ரீதர் இசை அமைக்கும் 25-ஆவது படம் இது. இதை கேள்விப்பட்ட இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், ஜோஷ்வா ஸ்ரீதருக்கும், ‘பறந்து செல்லவா’ படக்குழுவினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில்,
‘‘என் நண்பர் ஜோஷ்வா ஸ்ரீதருக்கு உரிய வெற்றியும் அன்பும் கிடைக்க வாழ்த்துகிறேன். ‘பறந்து செல்ல வா’ படக்குழுவில் இருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘பறந்து செல்லவா’ படத்தில் லுத்ஃபுதீனுடன் கதாநாயகியாக ஐஸ்வர்யா அராஜேஷ் நடிக்க, இரண்டாவது கதாநாயகியாக சீன நடிகை நரேல் கெங் நடித்துள்ளார். இவர்களுடன் சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, கருணாகரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை ‘8 பாயின்ட் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் பி.அருமைச்சந்திரன் தயாரித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;