சீனுராமசாமியை பாராட்டிய சிவகுமார்!

சீனுராமசாமி… வெல்க ராமசாமி!

செய்திகள் 2-Sep-2016 11:17 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ’தர்மதுரை’. சீனுராமசாமி இயக்கிய இப்படம் மருத்துவம் மற்றும் மருத்துவர்களை மையமாக வைத்து சமூக கருத்தையும் சொல்லும் படமாக அமைந்திருப்பதால் இப்படத்தை நிறைய பேர் பாராட்டி வருகிறார்கள். நடிகர் சிவகுமார் இப்படத்தை பார்த்து இயக்குனர் சீனுராமசாமிக்கு ‘கிராமத்து பின்னணியில் ஒரு நவீன கதை’ என்ற தலைப்பில் அனுப்பியுள்ள வாழ்த்து மடலில்,

‘‘சீனுராமசாமி முழுமையான படைப்பாளியாக தன்னை வெளிப்படுத்திய படம ‘தர்மதுரை’. விஜய்சேதுபதி எல்லா தரப்பு மக்களின் இதயங்களிலும் இடம் பிடிக்கும் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படிப்பில் ஜெயித்து வாழ்க்கையில் தோற்ற ஒரு டாக்டரின் திருப்பங்கள் நிறைந்த வாழ்க்கை திரையில் விரிகிறது.

காமராஜரின் மதிய உணவு திட்டத்தில் பசி போக்கிய ஏழைச் சிறுவன் மருத்துவ கல்லூரி பேராசிரியராகி காமராஜர் பெயரையே தனக்கு சூட்டிக் கொண்டது நெஞ்சில் நிலைக்கும் காட்சி!
ஏழை மக்களின் வரிப் பணத்தில் படித்து டாக்டரானவர்கள், கிராமத்து ஏழைகளுக்கு வைத்தியம செய்து நன்றி கடன் அடைக்க வேண்டும் என்ற தத்துவம் மருத்துவர்களுக்கு பாடம்!
தனக்கு தெரியாமல் தன் கருவை கலைத்த டாக்டர் கணவனை தமன்னா விவாகரத்து செய்வதில் உள்ள நியாயம்…

‘ஆஸ்பத்திரியில் உங்களை அண்ணான்னு கூப்பிட்டுட்டேன், நீங்க என்னமான்னு’ வெள்ளந்தியாய் சொன்ன அன்பு செல்வி பூச்சி மருந்து சாப்பிட்டு இறக்கும் சோகம்…
கல்லூரியில் கதை ஆரமபித்த பின் படம் முடியும் வரை அடுத்த காட்சி எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியாத திருப்பங்கள்..
சீனுராமசாமி வெல்க ராமசாமி…
இதுக்கும் மேலே மேலே உங்களிடம் எதிர்பார்க்கிறோம்…

என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;