வில்லன் ஆர்.கே.சுரேஷின் இன்னொரு முகம்?

வில்லனாக நடித்துவரும் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ‘தனி முகம்’ படத்தின் மூலம் ஹீரோவாகிறார்

செய்திகள் 7-Sep-2016 3:50 PM IST Chandru கருத்துக்கள்

‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ‘ஸ்டுடியோ 9’ ஆர்.கே.சுரேஷ். சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘தர்மதுரை’ வரை பல படங்களை தயாரித்துள்ளது இந்நிறுவனம். அதோடு, இயக்குனர் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் வில்லனாகவும் களமிறங்கினார் ஆர்.கே.சுரேஷ். அதனைத் தொடர்ந்து விஷாலின் ‘மருது’ படத்திலும் கொடூரமான வில்லனாக நடித்தார்.

வில்லனாக தன்னை ஏற்றக்கொண்ட ரசிகர்கள், ஹீரோவாகவும் வரவேற்பைத் தருவார்கள் என்ற நம்பிக்கையில் தற்போது ‘தனி முகம்’ படத்தில் நடிக்கிறார். ‘காட் இஸ் மதர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் சஜித் இயக்குகிறார். இப்படத்தில் சுரேஷுடன் இணைந்து தாக்ஷா, ரியாஸ் கான், கும்கி அஸ்வின், மிப்புசாமி, சந்திரமௌலி ஆகியோர் நடிக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-
இசை :- F.S.பைசல்
ஒளிப்பதிவு :- கேசவன்
எடிட்டிங் :- சுரேஷ் அர்ஸ்
ஸ்டண்ட் :- ஜான் மார்க்
நடனம் :- தீனா

#ThaniMugam #RKSuresh #Studio9MediaWorks #Dharmadurai #Marudhu #TharaThappattai

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பில்லா பாண்டி ட்ரைலர்


;