மலையாள படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியியுள்ளார் பாபி சிம்ஹா. ஏற்கெனவே ‘நேரம்’ படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான பாபி சிம்ஹா, அதற்கு பிறகு நிவின் பாலியின் ‘ஒரு வடக்கன் செல்ஃபி’யில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இந்த படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக பாபி சிம்ஹா நடிக்க ஒப்புக்கொண்டுள்ள படம் ‘கம்மார சம்பவம்’. திலீப் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சித்தார்த்தும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் என்ற செய்தியை ஏற்கெனவே நமது இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம். இப்போது இப்படத்தில் திலீப், சித்தார்த்துடன் பாபி சிம்ஹாவும் இணைந்துள்ளார். கேரளாவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பாடும் இப்படத்தில் கேரளாவில் வாழும் தமிழ் இளைஞராக நடிக்கவிருக்கிறார் பாபி சிம்ஹா! ரதீஷ் அம்பாட் இயக்கும் இப்படத்தை மம்முட்டி நடிப்பில் ‘பழசிராஜா’ என்ற படத்தை தயாரித்த ‘கோகுலம் ஃபிலிம்ஸ்’ பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 20 ஆம் தேதி கொச்சியில் துவங்கவிருக்கிறது.
#BobbySimha #Neram #NivinPauly #oruVadakkanSelfie #KammaraSambavam #Dileep #Siddarth #Urumeen
மாறுபட்ட கேரக்டர்களையும், கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் பாபி சிம்ஹாவும் ஒருவர்!...
‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்க, அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன்...
ஏற்கெனவே வெளியாகி வெற்றிபெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுத்து வரும் சீஸன் இது. ரஜினிகாந்தின்...