சுந்தர்.சி-ன் அடுத்த அதிரடி: ‘டிவி’ ரசிகர்களே திகிலடையத் தயாரா?

4 மொழிகளில் உருவாகும் ‘தேவ சேனா’ டிவி சீரியலைத் தயாரிக்கிறார் சுந்தர்.சி

செய்திகள் 14-Sep-2016 11:37 AM IST Chandru கருத்துக்கள்

‘அரண்மனை 2’ படத்தைத் தொடர்ந்து தற்போது தனது கனவுப்படமான ‘சங்க மித்ரா’வில் (தற்காலிக டைட்டில்) பிஸியாக இருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி. பல கோடி ரூபாய் பட்ஜெட், ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸின் 100வது படம், ஏ.ஆர்.ரஹ்மான் இசை என பல சிறப்புக்களோடு உருவாகவிருக்கும் இப்படத்தில் நாயகர்களாக நடிக்க மகேஷ் பாபு, ஜெயம்ல ரவியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம். பிரம்மாண்ட படம் என்பதால் கொஞ்சம் நிதானமாக இப்படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளாராம் சுந்தர்.சி. இதனால் கிடைக்கும் இடைவெளியில் டிவி சீரியல் தயாரிப்பு ஒன்றிலும் கவனம் செலுத்தி வருகிறாராம் அவர்.

நான்கு தென்னிந்திய மொழிகள் பேசவிருக்கும் இந்த டிவி சீரியலுக்கு ‘தேவ சேனா’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறாராம். இந்த மெகா ஹாரர் தொடரை ராஜ் கபூர், செல்வா இணைந்து இயக்குகிறார்கள். யுகே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் இந்த சீரியல் ஒளிப்பரப்பாகும் எனத் தெரிகிறது.

#SundarC #Baahubali #ARRahman #JayamRavi #MaheshBabu #SanghaMithra #RajKapoor #Selva

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;