‘கடவுள் இருக்கான் குமாரு’க்காக 4 டீஸர்கள்!

இப்படம், ‘கடவுள் இருக்காண்டா குமாரு’ என்று சொல்ல வைக்கும்! – ஜி.வி.பிரகாஷ்!

கட்டுரை 15-Sep-2016 3:23 PM IST VRC கருத்துக்கள்

எம்.ரஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. கடந்த 25 ஆண்டுகளாக சினிமாவில் இயங்கி வரும் டி.சிவாவின் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம அவரது 19-ஆவது தயாரிப்பாகும். தீபாவளியை முன்னிட்டு ரிலீசாகவிருக்கும் இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர்களின் பார்வைக்காக படத்தின் 4 டீஸர்கள் திரையிடப்பட்டது. இந்த டீஸர்கள் அடுத்து அடுத்து வெளியாகவிருக்கிறது.

அப்போது விழாவில் பேசிய ஜி.வி.பிரகாஷ்குமார், ‘‘நான் சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி 10 வருடங்கள் ஆகிறது. கடந்த 25 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து வருபவர் டி.சிவா சார். அவரது தயாரிப்பில் இப்படத்தில் நடித்தது பெருமையான விஷயம். அதைப் போல வரிசையாக வெற்றிப் படங்களை கொடுத்து வரும் எம்.ராஜேஷ் சார் இயக்கத்தில் நடித்ததும் நல்ல அனுபவம்! இங்கு பேசிய அனைவரும் தயாரிப்பாளரின் இயக்குனர் எம்.ராஜேஷ் என்றனர். அவர் தயாரிப்பாளர்களின் இயக்குனர் மட்டும் அல்ல, நடிகர்களின் இயக்குனரும் கூட! ராஜேஷ் சார் நடிகர்களிடம் வேலை வாங்கும் விதமே தனி ஸ்டைல்! உங்களுக்கு என்ன வருமோ அதை செய்யுங்கள் என்று கூறி நிறைய ஃப்ரீடம் கொடுப்பார். எதையும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டார். அதனால் நடிக்க எளிதாக இருக்கும். எனக்கு தெரிந்து தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் அதிக அசிஸ்டென்டுகளை வைத்து படங்களை இயக்கி வரும் இயக்குனர் எம்.ராஜேஷ் சாராகதான் இருப்பார்! 20-க்கும் மேற்பட்ட அசிஸ்டென்ட்ஸ் அவரிடம் பணியாற்றி வருகிறார்கள்.

இப்படத்திற்கு ‘கடவுள் இருக்கான் குமாரு’ என்ற டைட்டிலை வைக்கலாம் என்று முதலில் யோசனை சொன்னது நான் தான்! அதற்கு ராஜேஷ் சாரும் தயாரிப்பாளர் டி.சிவா சாரும் உடனே சம்மதம் தெரிவித்தார்கள். என் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகாது! இப்படம் வெளியான பிறகு ’கடவுள் இருக்காண்டா குமாரு’ என்று சொல்ல வைக்கும் என்பது என் நம்பிக்கை’’ என்றார் ஜி.வி.பிரகாஷ்.

இவ்விழாவில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள். அத்துடன் இப்படத்தில் கதாநாயகிகளாக நடித்திருக்கும் ஆனந்தி, நிக்கி கல்ராணி, மற்றும் மனோபாலா, ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ சங்கர், சிங்கம் புலி முதலானோரும் விழாவில் கலந்துகொண்டு பேசினார்கள்.

நேற்று தயாரிப்பாளர் டி.சிவாவின் பிறந்த நாள் என்பதால், விழாவில் அவர் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாட அனவரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

#KadavulIrukaanKumaru #GVPrakashKumar #NikkiGalrani #Rajesh #Aanandhi #AmmaCreations

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;