தமிழகத்தில் இன்று நடைபெறும் முழு கடைகள் அடைப்பு போராட்டத்திற்கு தமிழ் திரையுலகமும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் இன்று சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளும் ரத்து செய்யபபட்டுள்ளன. அதைபோல தியேட்டர்களில் காலை முதல் மாலை வரையிலான சினிமா காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தமிழ் நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பாட பத்திரிகையாளர் யூனியன், தென்னிந்திய திரைப்படம் மற்றும் தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து இந்த முடிவினை எடுத்துள்ளது.
இதன் அடிப்படையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கர்நாடகத்தில் தமிழ் மக்கள் கொடூரமாக தாக்கப்படுவதை கண்டித்தும், தமிழக விவசாயிகளின் துயரத்தை தீர்க்கும் வகையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் நடைபெறுகிற முழு அடைப்பு போராட்டத்தில் தமிழ் திரையுலகமும் கலந்து கொள்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#NadigarSangam #KalaipuliSThanu #Vishal #Naaser #Karthi #DirectorsUnion
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனமும் ‘விவேகானந்தா...
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...
‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘குண்டு’. இந்த படத்தை தொடர்ந்து தினேஷ் நடிக்க...