கிஷோர், கருணாகரன் நடிக்கும் ‘கடிகார மனிதரகள்’

சசிகுமார் உதவியாளர் இயக்கும் ‘கடிகார மனிதர்கள்’

செய்திகள் 16-Sep-2016 1:56 PM IST VRC கருத்துக்கள்

வாழ்வியலை தேடி கிராமத்திலிருந்து நகரத்திற்கு வருபவர்கள் தாங்கள் உழைக்கும் ஊதியத்தை பெரும்பாலும் வாடகைக்கே இழக்கிறார்கள். இது போல உள்நாட்டு அகதிகளாக வீடு வீடாக மாறி தங்களுடைய வாழ்வை எவ்வாறு கழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படம ‘கடிகார மனிதர்கள்’. இப்படத்தில் கிஷோர், கருணாகரன் கதாநாயகர்களாக நடிக்க, கதாநாயகியாக ஷெரின் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கேரக்டரில் பிரதீப் ஜோஸ், மற்றும் லதா ராவ், வாசு விக்ரம், பாலாசிங், சிசர் மனோகர், பாவா லட்சுமணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இயக்குனர் சசிகுமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வைகறை பாலன் இயக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை உமா சங்கர் கவனிக்கா, சாம்.சி.எஸ்.இசை அமைக்கிறார். ‘கிரைஸ்ட் பி தி இன்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் பிரவீஷ் கே., பிரதீப் ஜோஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. விரைவில் திரைக்கு வரும் விதமாக இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

#KadikaraManithargal #Kishore #Karunakaran #VaikaraiBalan #UmaShankar #SamCS

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ட்ரைலர்


;