நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் பக்தி படம்!

புதுமுகங்கள் நடிக்கும் பக்தி படம ‘மேற்கு முகப்பேர் ஸ்ரீகனக துர்கா’

செய்திகள் 16-Sep-2016 4:35 PM IST VRC கருத்துக்கள்

புதுமுகங்கள் மகி, சரவணன் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, திவ்யா நாகேஷ், ஜான்விகா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கும் பக்தி படம் ‘மேற்கு முகப்பேர் ஸ்ரீகனக துர்கா’. ‘காளையாப்பா பிக்சர்ஸ்’ சார்பில் ஜி.காளையப்பன் வழங்க, ஜோதி விநாயகர் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தை சந்திர கண்ணையன் இயக்குகிறார். இப்படம் குறித்து இயக்குனர் சந்திர கண்ணையன் கூறும்போது,

‘‘இப்போது சாமி படங்கள் தயாரிப்பு குறைந்து விட்டது. பேய் படங்கள் தான் எடுக்கிறார்கள். ஆனால் நாங்கள் துணிந்து சாமி படமாக இந்த ‘மேற்கு முகப்பேர் ஸ்ரீகனகதுர்கா’வை எடுத்துள்ளோம். ஜாதகத்தில் தோஷம் இருக்கும் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் திருமணம செய்து கொள்கிறார்கள். அதனால் தோஷம் அவர்களை படாத பாடுபடுத்தி விடுகிறது. விரதமிருந்து அம்மனை வேண்டுகிறார்கள். ஸ்ரீகனகதுர்கா அவர்களை எப்படி காப்பாற்றினாள் என்பதே படத்தின் ஒரு வரிக் கதை. சாமி படங்கள் என்றால் ‘தேனிசை தென்றல்’ தேவா தனி சிரத்தை எடுத்து இசை அமைப்பார. இப்படத்திலும் 5 பாடல்களை சிறப்பாக கொடுத்துள்ளார். புதுமுகங்களுடன் டி.பி.கஜேந்திரன், டெல்லி கணேஷ், நதியாஸ்ரீ, வைகை கவிதா, ராகவி. சுஷ்மிதா, ஸ்ரீஹரி, ஜெனிஃபர் என பலர் நடிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை என்.டி சிவமனோகரான் கவனிக்கிறார். இப்படத்தை விரைவில் ரிலீஸ் செய்வதற்கான பணிகள் இப்போது நடந்து வருகிறது’’ என்றார்.

#MerkuMogappairSriKanakaDurga #Mahi #Saravanan #DivyaNagesh #JothiVinayagarCinemas #ChandiraKannaiyan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஐங்கரன் ட்ரைலர்


;