ஜே.கே.ரித்தீஷின் ‘தப்பாட்டம்’

மகேந்திரன், பிரியதர்சன் உதவியாளர் இயக்கும் ‘தப்பாட்டம்’

செய்திகள் 20-Sep-2016 11:19 AM IST VRC கருத்துக்கள்

நடிகரும், அரசியல் பிரமுகருமான ஜே.கே.ரித்தீஷ் தனது ‘சாகியா செல்லுலாய்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரிக்கும் இரண்டாவது படம் ‘தப்பாட்டம்’. இப்படத்தில் கதாநாயகனாக புதுமுகம் சுதாகர் நடிக்கிறார். கதாநாயகியாக டோனா ரோசாரியோ நடிக்கிறார். இவர்களுடன் இப்படத்தை இயக்கும் முஜிபூர் மற்றும் துளசி, ரூபி, ஜெயகுமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தப்படிக்கும் கலைஞனுக்கும், ஒப்பாரி வைக்கும் பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. இருவரும் திருமணம் செய்து தம்பதியாக வாழ்ந்து வர, இவர்களது வாழ்க்கையில் எதிர்பாரதவிதமாக ஒரு சம்பவம் நிகழ்ந்து இவர்களது உறவில் பிளவு ஏற்படுகிறது. இவர்களால் பிரச்சனைகளை சமாளித்து மீண்டும் வாழ்க்கையில் இணைய முடிந்ததா? இல்லையா? என்பதை மனித உறவுகளின் பின்னணியில் சொல்லும் படமாம் ‘தப்பாட்டம்’. இப்படத்தை இயக்கி வரும் முஜிபூர், இயக்குனர்கள் மகேந்திரன், பிரியதர்சன் ஆகியோருடன் பணியாற்றியவர் என்பதோடு இதற்கு முன் ‘இரு நதிகள்’ என்ற ஒரு படத்தை இயக்கவும் செய்துள்ளார். பொள்ளாச்சி, உடுமலை பேட்டை, சென்னை, திருவனந்தபுரம், நாகர் கோயில் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ள இப்படத்திற்கு பழனி பாலு இசை அமைக்கிறார். இப்படத்தை தீபாவளி வெளியீடாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

#JKRitheesh #Thappattam #Sudhakar #Thulasi #Rupi #Jayakumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜாம்பி ட்ரைலர்


;