‘விலங்குகள் நல வாரியம்’ பதவி - சௌந்தர்யா ரஜினி விளக்கம்!

கௌரவ பதவி -   சௌந்தர்யா ரஜினி விளக்கம்!

செய்திகள் 20-Sep-2016 3:30 PM IST VRC கருத்துக்கள்

ரஜினிகாந்தின் இளைய மகளும், ‘கோச்சடையான்’ பட இயக்குனருமான சௌந்தர்யா ரஜினி அமீபத்தில் இந்திய அரசின் விலங்குகள் நல வாரியம் அமைப்பின் (ANIMAL WELFARE BOARD) தூதுவராக நியமிக்கப்பட்டார். இந்த தகவலை நமது இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இந்த அமைப்பு ஜல்லிகட்டுக்கு எதிரான ஒரு அமைப்பு என்ற சந்தேகத்தின் பெயரில் சிலர் சௌந்தர்யா அந்த பதவியை ஏற்க கூடாது என்று பேசி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து ஒரு விளக்கத்தை சௌந்தர்யா சார்பில் அவரது மக்கள் தொடர்பாளர் வெளியிட்டுள்ளனர்.

அதில்,

‘‘சௌந்தர்யா ரஜினிகாந்த் அனிமேஷன் மற்றும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸில் நிபுணத்துவம் பெற்றவர். இவரை தற்போது ANIMAL WELFARE BOARD எனும் அமைப்பு தங்களது தூதுவராக நியமித்துள்ளது. சௌந்தர்யாவின் வேலை திரைப்படங்களில் மிருகங்களை வைத்து காட்சிகளை படமாக்கியுள்ளார்களா? அல்லது கிராஃபிக்ஸ் தானா என்பதை உறுதி செய்து ஒப்புதல் வழங்குவது தான்! அவருக்கு அந்த அமைப்பு இந்த பதவி வழங்க காரணம் அனிமேஷன் மற்றும் கிராஃபிக்ஸ் துறையில் நல்ல நிபுணத்துவம, மற்றும் ‘கோச்சடையான்’ படத்தை இயக்கிய அனுபவம் இருப்பதால் தான்’’ என்பதையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

#SoundaryaRajinikanth #Kochadaiiyaan #Kabali #Rajinikanth #Soundarya #Ashwin

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;