சூர்யா படத்திற்கு ரஜினி பஞ்ச் டயலாக் டைட்டில்!

சூர்யா பட தலைப்பு அறிவிப்பு!

செய்திகள் 22-Sep-2016 11:07 AM IST RM கருத்துக்கள்

‘சிங்கம்-3’யை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா! கே.ஈ.ஞான்வேல் ராஜாவின் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனமும், சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படம் சூர்யா நடிக்கும் 35-ஆவது படமாகும். விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்படத்திற்கு ரஜினி பேசிய பஞ்ச் டயலாக் ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெரும்பாலும் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் படத்தலைப்பு அறிவிப்பு படப்பிடிப்பு துவங்கி பட வேலைகள் இறுதிகட்டத்தை எட்டும் நிலையில் தான் அறிவிப்பது வழக்கம். ஆனால் அதற்கு மாறாக சூர்யா நடிக்கும் இப்படத்தின் தலைப்பு படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ள்து. சூர்யாவும், விக்னேஷ் சிவனும் முதன் முதலாக இணையும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;