கிருஷ்ணா நடிக்கும் படத்திற்கு ரஜினி பட தலைப்பு!

‘வீரா’ - ரஜினி பட தலைப்பில் நடிக்கும் கிருஷ்ணா!

செய்திகள் 27-Sep-2016 11:03 AM IST VRC கருத்துக்கள்

கிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘யாமிருக்க பயமே’ படம் உட்பட பல வெற்றிப் பங்களை தயாரித்த ‘ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட்’ எர்லெட் குமார் தயாரிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ‘கவலை வேண்டாம்’. ஜீவா, காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் இப்படத்துடன் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார் எர்லெட் குமார். அறிமுக இயக்குனர் ராஜாராம் இயக்கும் இப்படத்திற்கு ரஜினி பட டைட்டிலான ‘வீரா’ என்று பெயர் சூட்டியுள்ளனர். அதிரடி, காதல் மற்றும் நகைச்சுவை கலந்த படமாக உருவாகி வரும் இப்படத்தில் கிருஷ்ணாவுடன் கதாநாயகியாக நடிகையும், மாடல் அழகியுமான ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். மற்றும் கருணா, தம்பி ராமையா, ராதாரவி, ‘மொட்டை’ ராஜேந்திரன், ‘யோகி’ பாபு, சரண்தீப் ஆகியோரும் நடிக்கும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைக்கிறார்,. செந்தில் ராகவன் கலை இயக்குனராக பணியாற்ற, இப்படத்தின் கதை திரைக்கதை, வசனம் ஆகிய பொறுப்புக்களை பாக்கியம் ஷங்கர் ஏற்றுள்ளார்.
‘யாமிருக்க பயமே’ பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனத்திற்காக கிருஷ்ணா மீண்டும் நடித்திருக்கும் இப்படம் ‘கவலை வேண்டாம்’ பட வெளியீட்டிற்கு பிறகு அதாவது இந்த ஆண்டு இறுதியில் வெளியாகுமாம்.

#Krishna #Karunakaran #Veera #YaamirukaBayame #RSInfotainment #ElredKumar #KavalaiVendam #Jiiva

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

களரி ட்ரைலர்


;