கள்ளாட்டம் - விமர்சனம்

விறுவிறுப்பு குறைவான ஆட்டம்!

விமர்சனம் 30-Sep-2016 1:29 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : G. Ramesh
Production : White Horse Productions
Starring : Nandha, Richard, Sharika, Rethva Isvar
Music : Umar Ezhilan
Cinematography : G. Ramesh
Editing : V. T. Vijayan, S. R. Ganesh Babu

கிங், திருடா திருடி, ஆழ்வார் உட்பட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த ரமேஷ்.ஜி இயக்குனராக களமிறங்கியிருக்கும் ‘கள்ளாட்ட’த்தின் எப்படி?

கதைக்களம்

குழந்தைகள் கடத்தல், செயின் பறிப்பு, நில அபகரிப்பு, காலாவதியான மருந்து விற்பனை போன்ற சமூகவிரோத செயல்கள் செய்து வரும் கும்பல் தலைவன் ஏழுமலை! இவனால் பெரிதும் பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரியான நந்தா எப்படி பெரும் பலம் படைத்த ஏழுமலையின் கொட்டத்தை ‘கள்ளாட்டம்’ ஆடி அடக்குகிறார் என்பதை 97 நிமிடங்களில் சொல்லும் படமே இந்த ‘கள்ளாட்டம்’.

படம் பற்றிய அலசல்

‘காவல்துறை மக்களின் நண்பன்’ என்பதை வலியுறுத்தும் படம். சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்படும் இளைஞர்களை, தன் சுயநலத்துக்காக பயன்படுத்தி பணத்தை குவிக்கும் ஏழுமலையை அவனது கூட்டாளிகளையும், அவனது குழந்தையையும் வைத்தே மடக்கி பிடிக்கும் போலீஸ் அதிகாரி நந்தாவின் செயல் திட்டங்கள் ரசிக்கும்படி அமைந்திருக்கிறது, என்றாலும் அதை விறுவிறுப்பான பரபரப்பான காட்சி அமைப்புகளுடனும், லாஜிக் மீறல்கள் இல்லாமலும் படமாக்குவதில் இயக்குனர் கோட்டைவிட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். காதல், டூயட், காமெடி போன்ற பொழுதுபோக்கு விஷயங்களை நம்பாமல், தனது சீரியஸான திரைக்கதையை நம்பியே பயணித்திருக்கும் இயக்குனர் ரமேஷ்.ஜியின் முயற்சியைப் பாராட்டலாம்! இயக்குனரே ஒளிப்பதிவாளரும் என்பதால் ஒளிப்பதிவு கச்சிதமாக அமைந்துள்ளது. உமரின் இசையில் வரும் தெலுங்கு குத்து பாடல், அதற்கான நடனம் ரிலாக்ஸ் தரும் விஷயம்! பின்னணி இசையிலும் குறைவைக்கவில்லை உமர்!

நடிகர்களின் பங்களிப்பு

போலீஸ் அதிகாரியாக வரும் நந்தா ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பில் கவர்கிறார். குழந்தையையும், பணத்தையும் இழந்து பரிதவிக்கும் கேரக்டரில் நடித்திருக்கும் ரிச்சர்ட், இன்னொரு போலீஸ் அதிகாரியாக வரும் இளவரசு, டாக்டராக வரும் குமார் நடராஜன், ரிச்சர்ட்டின் மனைவியாக வரும் சாரிகா ஆகியோரும் தங்களது பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அமைதியான வில்லன் ஏழுமலையாக வரும் ஏழுமலை தோற்றத்திலும் நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார்.

பலம்

குறுகிய நேரத்தில் படத்தை முடித்திருப்பது
நந்தா, இளவரசு ஆகியோரின் சிறந்த பங்களிப்பு

பலவீனம்

விறுவிறுப்பில்லாத காட்சி அமைப்புகள்
அதிகப்படியான லாஜிக் மீறல்கள்

மொத்தத்தில்...

‘எப்போதுமே போலீஸ் மக்களின் நண்பன்தான்’ என்ற கருத்தை வலியுறுத்தி சித்தரிக்கப்பட்டிருக்கும் இப்படம் போலீஸுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும், சமூகவிரோதிகளுக்கு பாடம் புகட்டும் வகையிலும் அமைந்திருப்பதால் இந்த ‘கள்ளாட்ட’த்திற்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ஒரு வரி பஞ்ச் : விறுவிறுப்பு குறைவான ஆட்டம்!

ரேட்டிங் : 3/10

#Kallattam #Nandha #Richard #Sharika #UmarEzhilan #GRamesh #RethvaIsvar #Kallattam Movie Review

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பரமபதம் விளையாட்டு - ட்ரைலர்


;