உலக அளவில் பிரபலமடைந்த ‘பாகுபலி’ பிரபாஸ்!

‘பாகுபலி’ பிரபாஸுக்கு உலகப் புகழ் மியூசியத்தில் மெழுகுச் சிலை!

செய்திகள் 3-Oct-2016 10:16 AM IST VRC கருத்துக்கள்

உலகப் புகழ பெற்றவர்களின் மெழுகு சிலைகளை கொண்ட மியூசியம் லண்டனில் இருக்கிறது. ‘மேடம் டுசாட்ஸ்’ என்று அழைக்கப்படும இதன் கிளைகள் அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், தாயலாந்த் முதலான நாடுகளில் இருக்கிறது. இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடங்க திட்டமிட்டுள்ளனர். இந்த மியூசியத்தில் சினிமாவிலுள்ள பிரபலங்கள் உட்பட நிறைய பிரபலங்களின் மெழுகு சிலை தத்ரூபமாக வடிவமைத்து வைக்கப்பட்டுள்ளன. பாங்காக் கிளையில் ‘பாகுபலி’யில் நடித்த பிரபாஸின் மெழுகு சிலை வைக்கப்படுகிறது. இதற்காக அவருடைய உருவத்தை பலவேறு விதமாக அளவெடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து பாங்காக் மேடம் டுசாட்ஸ் பொது மேலாளர் நொப்படான் பிரப்பிம்பண்ட் கூறும்போது,
‘‘இந்தியாவில் அதிக வசூல் செய்த படம் ‘பாகுபலி’. இதை தொடர்ந்து கூகுளில் தொடர்ந்து அதிகளிவ்ல் தேடப்படும் ஒரு நடிகராக திகழ்ந்து வருகிறார் பிராபாஸ். பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அவருடைய மெழுகு சிலை வைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். மகாத்மா காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறகு பிரபாஸின் பாகுபலி கேரக்டர் இந்தியாவின் செலவாக்கு மிக பிரபங்லங்களின் வரிசையில் இடம் பிடித்திருப்பதால் அவருஅக்கு மெழுகுச் சிலை அமையவிருக்கிறது’’ என்றார்.

பிரபாஸ் இது குறித்து கூறும்போது, ‘‘மேடம் டுசாட்ஸ் என்னை தேர்வு செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. இதற்கு காரணமாக இருந்த என் ரசிகர்களின் அள்வில்லா அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. பாகுபலியில் என்னை நடிக்க வைத்த எனது குரு எஸ்.எஸ்.ராஜமௌலி அவர்களுக்கும் எனது நன்றி’’ என்றார்.

#Prabhas #Baahubali #SSRajamouli #Anushka #Tamannah #Sathyaraj #RamyaKrishnan #Keeravani #Naaser #baahubali 2

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சாஹோ டீஸர்


;