விஷாலின் ‘துப்பறிவாள’னில் நிவின் பாலியின் நாயகி!

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தில் ராகுல் ப்ரீத் சிங்கிற்குப் பதிலாக புதிய நாயகி ஒப்பந்தமாகியிருக்கிறார்

செய்திகள் 15-Oct-2016 12:06 PM IST Chandru கருத்துக்கள்

சுராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘கத்தி சண்டை’ படத்தின் டீஸர் நேற்று வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஷால். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க தெலுங்கு நடிகை ராகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், சிற்சில காரணங்களால் இப்படத்திலிருந்து நடிகை ராகுல் ப்ரீத் சிங் விலகிவிட்டாராம். இப்போது அவருக்குப் பதிலாக மலையாள நடிகை அனு இம்மானுவேல் நடிக்கிறார்.

நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த ‘ஆக்ஷன் ஹீரோ பிஜு’ படத்தின் மூலம் மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் அனு இம்மானுவேல். ‘துப்பறிவாளன்’ படத்தில் நாயகியாக நடிப்பதன் மூலம் தமிழிலும் அறிமுகமாகிறார். இப்படத்தில் இன்னொரு நாயகியாக அக்ஷரா ஹாசனும் நடிப்பதாகத் தெரிகிறது.

#RakulPreetSingh #Vishal #Thupparivalan #Mysskin #NivinPauly #ActionHeroBiju #VinayRai #Prasanna

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;