சிவகார்த்திகேயன் - நயன்தாரா படம் பற்றிய புதிய தகவல்கள்!

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் படம் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன

செய்திகள் 17-Oct-2016 10:06 AM IST Chandru கருத்துக்கள்

‘ரெமோ’ படத்தின் வசூல் நிலவரங்களால் உச்சிகுளிர்ந்துள்ளது ‘24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ நிறுவனம். இதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் இரண்டாவது படைப்பை மோகன் ராஜா இயக்கவிருக்கிறார். சிவகார்த்திகேயன், நயன்தாரா நாயகன் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 11ஆம் தேதி முதல் துவங்கவிருக்கிறது. இப்படத்தில் இவர்களோடு ஃபஹத் ஃபாசில், சினேகா, ரோகிணி, பிரகாஷ்ராஜ், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் ஆகியோர் நடிக்கிறார்கள் என ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இப்படத்தில் 3வது காமெடியனாக நடிகர் தம்பி ராமையாவும் இணைந்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக இணைகிறார் தம்பி ராமையா.

இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியா, புனே, மும்பை ஆகிய இடங்களில் நடக்கவிருக்கிறது. ‘தனி ஒருவன்’ போன்று சமூக விழிப்புணர்வுள்ள போலீஸ் படமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

#SivaKarthikeyan #Remo #MohanRaja #Nayanthara #RJBalaji #Sathish #ThambiRamaiah #24AMStudios #RDRaja #Anirudh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;