சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘AK-57’ படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு இப்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் நடிக்கிறார் என்று முதலில் பேசப்பட்டது. அதனை தொடர்ந்து அபிஷேக் பச்சன் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியானது. ஆனால் இப்போது இவர்கள் இருவரும் இல்லை, இன்னொரு பாலிவுட் பிரபலமான விவேக் ஓபராய் அஜித்துக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இது சம்பந்தமான எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் இப்படத்தை தயாரிக்கும் ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தினர் வெளியிடவில்லை. அஜித்தின் ‘வேதாளம்’ படத்தை தொடர்ந்து இப்படத்திற்கும் அனிருத் தான் இசை அமைப்பாளர். இப்படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், கருணாகரன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
#SiruthaiSiva #Thala57 #Ajith #VivekOberoi #Anirudh #SathyaJothiFilms #KajalAggarwal #AksharaHaasan
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...
ரஜினி நடிப்பில் எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினி...
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிக்கும் படம் ‘இந்தியன்-2’. இந்த படத்தின்...