பாண்டிராஜ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார்!

ஜி.வி.பிரகாஷை இயக்கும் பாண்டிராஜ்!

செய்திகள் 21-Oct-2016 10:48 AM IST VRC கருத்துக்கள்

கெனன்யா ஃபிலிம்ஸ், லிங்கபைரவி கிரியேஷன்ஸ், பி.கே.ஃபிலிம் ஃபேக்டரி ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘புரூஸ்லீ’. ஜி.வி.பிரகாஷ், கிருத்தி கார்பண்டா ஜோடியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமாரே இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியாகிறது. இதனையொட்டி நேற்று மாலை இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். ’புரூஸ்லீ’யை இயக்குனர் பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இதனால் இவ்விழாவிற்கு இயக்குனர் பாண்டிராஜும் வந்திருந்தார். அப்போது அவர் பேசும்போது,

‘‘எங்கிட்ட மோதாதே’ படத்தை இயக்கிய லட்சுமிராம், ‘புரூஸ்லீ’ படத்தை இயக்கியிருக்கும் பிரசாந்த் இருவரும் என்னிடம் உதவியாளர்களாக பணிபுரிந்தவர்கள் தான். இவர்களை போன்று இன்னும் சில உதவியாளர்கள் படத்தை இயக்கப் போகிறார்கள். பிரசாந்த் தன் பெயருடன் பாண்டிராஜையும் இணைத்து வைத்துள்ளான். முதலில் அது என் மீதுள்ள மரியாதை நிமித்தமாக என்று தான் நினைத்தேன். ஆனால் பிறகு தான் தெரிந்த்து அவனுடைய அப்பா பெயரும் பாண்டிராஜ் என்று! பிரசாந்த் மிக திறமையானவர். நன்றாக அரசியல் செய்யவும், தெரிந்தவன்! அவன் நன்றாக வேலை செய்வான்! ஆனால் எல்லாம் அவனுடைய சுயநலத்துக்காக தான்! அவன் சினிமாவில் பிழைத்துக் கொள்வான். முதல் படமே ஜி.வி.யை வைத்து இயக்கியிருக்கிறான். நிச்சயமாக இந்த ‘புரூஸ்லீ’ வெற்றிப்படமாக அமையும். பிரசாந்தை தொடர்ந்து நானும் ஜி.வி.பிரகாஷை வைத்து விரைவில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறேன். இப்படம் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்’’ என்றார்.

#BruceLee #GVPrakash #CaarthickRaju #Pandiraj #KenanyaFilms #Selvakumar #KirtiKharbhanda #Selvakumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;