உலகசாதனை முயற்சியாக 10 மணிநேரத்தில் எடுக்கப்பட்ட படம்!

10 மணிநேரத்தில் எடுக்கப்பட்ட படம் ‘அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’

செய்திகள் 22-Oct-2016 12:37 PM IST VRC கருத்துக்கள்

உலக சாதனை முயற்சியாக 10 மணி நேரத்தில் நேற்று ஒரு படம் எடுக்கப்பட்டது. ‘அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை எம்.எஸ்.செல்வா இயக்கியுள்ளார். காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரையில் பத்து மணி நேரத்தில் எடுக்கப்பட்ட இப்படத்தின் கதைக்களம் காமெடி, ஹாரர் தான்!

ஒரு வீட்டுக்கு புதுமண தம்பதிகள் குடி வருகிறார்கள். கணவனுக்கு மனைவியை பிடிக்கவில்லை. எனவே பேய் நம்பிக்கையை வரவழைத்து விரட்ட சில நண்பர்களை அமர்த்துகிறான். திகிலுடன் முதல் பாதி சென்றுகொண்டிருக்கும்போதே இன்னொரு புதுமண தம்பதி தங்க இடம் கேட்டு வருகிறார்கள். அவர்களை மேலே தங்க வைக்கிறான் கணவன். இந்த நேரத்தில் அங்கிருக்கும் பேய்கள் தான் செட் பண்ணிய போலி பேய்கள் இல்லை… உண்மையான பேய்கள் என்று தெரிய வருகிறது. அதன் பின் அந்த உண்மை பேய்களிடம் மாட்டிக்கொண்டு இரு தம்பதிகளும் என்னென்ன பாடு படுகிறார்கள் என்பதை இரண்டாம் பாதி முழுக்க வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடியாக சொல்லப்படும் படமாம் ‘அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’.

இப்படத்தில் டாக்டர் பி.சரவணன், அனுகிருஷ்ணன், சிங்கம்புலி, குமரேசன், இயக்குனர் எம்.எஸ்.செல்வா, கிரேன் மனோகர், நெல்லை சிவா, சுப்புராஜ், போண்டா மணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மூன்று பாடல்கள் இடம்பெறும் இப்படத்திற்கு ராஜா இசை அமைக்கிறார். ஜெயக்குமார் தங்கவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். 6 கேமராக்களை கொண்டு இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் எம்.எஸ்.செல்வா மற்றும் ஜி.அழகர் இணைந்து தயாரித்துள்ளனர்.

#ArandavanukkuIrundathellamPei #SingamPuli #MSSelva #Kumaresan #AnuKrishnan #Raja #JayakumarThangavel

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முத்துராமலிங்கம் - டிரைலர்


;