‘காஷ்மோரா - கொடி’ படங்களின் 10 ஆச்சரிய ஒற்றுமைகள்!

தீபாவளியை முன்னிட்டு உலகமெங்கும் அக்டோபர் 28ஆம் தேதி வெளியாகவிருக்கும் காஷ்மோரா, கொடி படங்களின் சில ஒற்றுமையான விஷயங்கள்

கட்டுரை 25-Oct-2016 10:45 AM IST Chandru கருத்துக்கள்

5 பெரிய படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு கடைசி நேரத்தில் காஷ்மோரா, கொடி என இரண்டு பெரிய படங்கள் மட்டுமே தீபாவளி ரிலீஸை உறுதி செய்துள்ளன. இப்படங்களோடு திரைக்குவராத கதை, கடலை என மேலும் 2 சிறிய பட்ஜெட் படங்களும் களமிறங்குகின்றன. காஷ்மோரா, கொடி படங்களுக்கான புரமோஷன் பணிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த இரண்டு படங்களிலும் உள்ள சில ஆச்சரியமான ஒற்றுமைகளை இங்கே பார்க்கலாம்.

* காஷ்மோரா, கொடி என இரண்டு படங்களின் முதல் எழுத்தும் ஆங்கில எழுத்தான ‘K’வில் தொடங்குகிறது.

* இதுவரை 13 படங்களில் நடித்துள்ள நடிகர் கார்த்தி, 3வது முறையாக ‘காஷ்மோரா’வில் இரட்டை வேடம் ஏற்று நடித்துள்ளார். இதைப்போலவே, 30 படங்களுக்கும் மேலாக நடித்துள்ள நடிகர் தனுஷுக்கும் ‘கொடி’தான் முதல் இரட்டை வேட படமாக அமைந்துள்ளது.

* ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களைத் தொடர்ந்து இயக்குனர் கோகுல் இயக்கும் 3வது படம் ‘காஷ்மோரா’. அந்தவகையில் எதிர்நீச்சல், காக்கி சட்டை படங்களைத் தொடர்ந்து ஆர்.எஸ்.துரைசெந்தில் குமாருக்கும் ‘கொடி’ 3வது படமாகவே அமைந்துள்ளது.

* காஷ்மோரா, கொடி இரண்டு படங்களுக்குமே இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்தான். இதில் தனுஷூடன் முதல்முறையாக கைகோர்த்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.

* இரண்டு படங்களிலுமே இரண்டு கதாநாயகிகள் உள்ளனர். ‘காஷ்மோரா’வில் இளவரசியாக நயன்தாராவும், ஜர்னலிஸ்டாக ஸ்ரீதிவ்யாவும் நடித்துள்ளனர். ‘கொடி’யில் வில்லி அரசியல்வாதியாக த்ரிஷாவும், கிராமத்துப் பெண்ணாக ‘பிரேமம்’ அனுபமா பிரமேஸ்வரனும் நடித்துள்ளனர்.

* ஆவிகளை விரட்டுவதில் வல்லவரான ‘காஷ்மோரா’ என்ற கேரக்டரில் கார்த்தியும், ‘கொடி’ என்ற அரசியல்வாதியாக தனுஷும் நடித்துள்ள இந்த இரண்டு படங்களுமே ஹீரோக்களின் கேரக்டர் பெயர்களையே தலைப்பாகக் கொண்டுள்ளன.

* 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள காமெடி நடிகர் விவேக் முதல்முறையாக ஹீரோவுக்கு அப்பாவாக நடித்துள்ள படம் ‘காஷ்மோரா’. அதேபோல் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ‘கொடி’யில் முதல்முறையாக ஹீரோவுக்கு அப்பாவாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

* ‘ராஜ்நாயக்’ கார்த்தியும், ‘கொடி’ தனுஷும் தாடி கெட்அப்பில் நடித்துள்ளனர்.

* முதல்முறையாக ‘காஷ்மோரா’ படத்தில் கார்த்தியும், ‘கொடி’ படத்தில் த்ரிஷாவும் நெகடிவ் ரோலில் நடித்துள்ளனர்.

* இரண்டு படங்களுமே ஒரே நாளில் தமிழ், தெலுங்கில் உலமெங்கும் வெளியாகின்றன. ‘காஷ்மோரா’ என்ற பெயரிலேயே ‘காஷ்மோரா’வும், ‘தர்மயோகி’ என்ற பெயரில் ‘கொடி’யும் தெலுங்கில் ரிலீஸாகின்றன.

#Karthi #Kaashmora #Kodi #Dhanush #Gokul #DuraiSenthilKumar #Nayanthara #SriDivya #Trisha #SanthoshNarayanan #DreamWarriorPictures #Anupama

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;