‘சாட்டை’ அனபழகனின் ‘ரூபாய்’ சொல்ல வரும் கருத்து?

சமூக கருத்தை சொல்லும் ‘கயல்’ சந்திரனின் ‘ரூபாய்’

செய்திகள் 26-Oct-2016 10:48 AM IST VRC கருத்துக்கள்

‘காட் பிக்சர்ஸ்’ சார்பில் பிரபு சாலமனும், ‘ஆர்.பி.கே.என்டர்டெயின்மென்ட் சார்பில் ஆர்.ரவிச்சந்திரனும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ரூபாய்’. இப்படத்தில் பிரபு சாலமனின் அறிமுகமுகங்களான ‘கயல்’ சந்திரனும், ஆனந்தியும் கதாநாயகன் கதாநாயகியாக நடித்துள்ளளனர். இவர்களுடன் கிஷோர், ரவிச்சந்திரன், சின்னி ஜெயந்த், ஹரீஷ் உத்தமன், ஆர்.என்.ஆர்.மனோகர், மாரிமுத்து, வெற்றிவேல் ராஜா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை ‘சாட்டை’ படத்தை இயக்கிய எம்.அன்பழகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியாகிறது.

‘ரூபாய்’ குறித்து இயக்குனர் அன்பழகன் கூறும்போது, ‘‘சாட்டை’ எனது முதல் படம். இதுவும் என் முதல் படம் போல தான்! ஏனென்றால் அது வேறு கதை களம், இது வேறு கதை களம். பணத்தாசை தான் எல்லா தீமைகளுக்கும் ஆணிவேர். தேனியில் லாரி டிரைவராக இருக்கும் பரணி, பாபு இருவரும் நண்பர்கள். அவர்களுக்கு இந்த உலகத்தில் இருக்கும் ஒரே சொத்து, சொந்தம் எல்லாமே ஒரு லாரி மட்டும் தான்! அந்த லாரிக்கு பணம் கட்ட ஒரு பெரிய சவாரியாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருகிறார்கள். அங்கிருந்து ஊர் திரும்பும்போது அவர்களுக்கு ஏற்பட்ட சின்ன பணத்தாசையால் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் மீண்டு ஊருக்கு திரும்பினார்களா இல்லையா? என்பதுதான் ‘ரூபாயி’ன் திரைக்கதை. பணம் நிம்மதி தராத என்று எந்த ஒரு ஏழையும் சொலவ்தில்லை. அதைப் போல நிம்மதி தராத பணம் தேவையில்லை என்று எந்த பணக்காரனும் பணத்தை ஒதுக்குவதும் இல்லை’’ இது தான் ரூபாய் படம்’’ என்றார்.

டாக்டர் ஜே.ஜெயகிருஷ்ணன், ‘காஸ்மோ வில்லேஜ்’ சிவகுமார் இருவரும் இணைந்து உலகம் முழுக்க வெளியிவிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை வி.இளையராஜா கவனித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆதித்ய வர்மா டீஸர்


;