விறுவிறு படப்பிடிப்பில் விக்ரம் பிரபுவின் ‘நெருப்புடா’

ரிலீசுக்கு தயாராகி வரும் விக்ரம் பிரபுவின் 3 படங்கள்!

செய்திகள் 26-Oct-2016 4:10 PM IST VRC கருத்துக்கள்

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘வீரசிவாஜி’ அடுத்த மாதம் ரிலீசாகவிருக்கிறது. இதற்கு அடுத்ததாக எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபுவும், மஞ்சிமா மோகனும் கதாநாயகன் கதாநாயகியாக நடித்து வரும் ‘முடிசூடா மன்னன்’ படம் வெளியாகும் என்று எதிரபார்க்கப்படுகிறது. ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ஜி.தியாகராஜன் தயாரித்து வரும் இப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக ஐஸ்வர்யா தத்தா நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ‘வீரசிவாஜி’, ‘முடி சூடா மன்னன்’ படங்களை தொடர்ந்து ‘நெருப்புடா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் விக்ரம் பிரபு. இது விக்ரம் பிரபு சொந்தமாக துவங்கியுள்ள ‘ஃபர்ஸ்ட ஆர்ட்டிஸ்ட்’ என்ற பட நிறுவனம் சார்பில் உருவாகி வரும் படமாகும்! இதில் விக்ரம் பிரபுவுடன் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்து வருகிறார். ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்கிய லட்சுமணனிடம் உதவியாளராக இருந்த அசோக் குமார் இயக்கும் ‘நெருப்புடா’விற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். இதில் தீயணைப்பு வண்டியின் டிரைவராக நடிக்கும் விக்ரம் பிரபு, சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகராகவும் நடிக்கிறார். ‘நெருப்புடா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்றும் இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து ரிலீசாகவிருக்கிறது என்றும் விக்ரம் பிரபுவுடன் பேசியபோது தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பாக்கி முனை டீஸர்


;