இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அண்ணன் இயக்கும் படம்!

‘பாகுபலி’ பட இயக்குனரின் அண்ணன் இயக்கும் ‘காட்சி நேரம்’

செய்திகள் 3-Nov-2016 3:28 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அண்ணனும், புகழ்பெற்ற தெலுங்கு ஸ்கிரிப்ட் ரைட்டருமான எஸ்.எஸ்.காஞ்சி இயக்கியுள்ள படம் ‘காட்சி நேரம்’. இந்த படத்தில் ரணதீர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ருஷார் மீரா நடிக்கிறார். இவர்களுடன் கார்த்திக், சத்யா, அப்ஜித் சர்மா, ஆதித்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.

‘காட்சி நேரம்’ படம் குறித்து இயக்குனர் எஸ்.எஸ்.காஞ்சி கூறும்போது, ‘‘இன்றைய சமுதாயம் ஒழுக்கமான முறையில் இருந்து எவ்வாறு சீரழிந்து கொண்டு போகிறது என்பதை விஷுவல் மீடியாவுக்கே உரிய அழுத்தமான காட்சிகளோடு அம்பலப்படுத்துகிற படம் ‘காட்சி நேரம்’. இந்த படத்தின் கதை ஒரு மாடர்ன் தம்பதியினரை சுற்றி நடக்கும் பரபரப்பான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த பரபரப்பான சம்பவங்கள் என்ன என்பது தான் படம்’’ என்றார்.

பரத் நடிப்பில் ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’ என்ற படத்தை தயாரித்து வரும் ‘ராமா ரீல்ஸ்’ என்ற பட நிறுவனம் தான் ‘காட்சி நேரம்’ படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்தின் ஒளிப்பதிவை பூபதி.கே கவனிக்க, மரகதமணி இசை அமைக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

#KaatchiNeram #SSKanchi #SSRajamouli #Baahubali #Ranadheer #Maragathamani #BoopathiK

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 - பலே பலே பாடல் வீடியோ


;