ஹீரோவுக்கு முன்பே அனிருத்தை ‘புக்’ செய்த ‘மனிதன்’ இயக்குனர்!

‘மனிதன்’ பட இயக்குனர் அஹ்மத் தனது அடுத்த படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத்தை ஒப்பந்தம் செய்திருக்கிறார்

செய்திகள் 4-Nov-2016 11:12 AM IST Chandru கருத்துக்கள்

ஒரு கதை எழுதி முடிக்கப்பட்டதும், முதலில் தயாரிப்பாளரை அணுகி ஸ்கிரிப்ட் ஓகே செய்யப்படும், அதன்பின் ஹீரோவை முடிவு செய்வார்கள், அதற்குப்பிறகே இசையமைப்பாளர் உள்ளிட்ட டெக்னீஷியன்களை ஒப்பந்தம் செய்வார்கள். ஆனால், இயக்குனர் அஹ்மத் தனது அடுத்த படத்திற்காக முதலில் அவர் ஒப்பந்தம் செய்திருப்பது இசையமைப்பாளர் அனிருத்தைத்தான். இப்படத்தை தயாரிக்கப்போவது யார், யார் ஹீரோ ஹீரோயின் என எதுவும் இன்னும் முடிவு செய்யப்படவில்லையாம் ஆனால் அனிருத்தான் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பதில் மட்டும் தெளிவாக அறிவித்துள்ளார் அஹ்மத். இப்படத்திற்கு ‘இதயம் முரளி’’ என பெயரிடப்பட்டுள்ளதாகக் தெரிகிறது.

‘வாமனன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ என 3 படங்களை இயக்கியுள்ளார் அஹ்மத்.

#Anirudh #Ahmed #EndrendrumPunnagai #Manithan #Vaamanan #UdhayanidhiStalin #HansikaMotwani

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;