ஜி.வி.பிரகாஷின் ‘KIK’ புதிய ரிலீஸ் தேதி!

க்ளீன் ‘யு’ வாங்கிய கடவுள் இருக்கான் குமாரு!

செய்திகள் 4-Nov-2016 4:18 PM IST VRC கருத்துக்கள்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, நிக்கி கல்ராணி முதலானோர் நடித்து, ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா தயாரித்துள்ள படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. அனைத்து வேலைகளும் முடிந்த இப்படத்தை இம்மாதம் 11-ஆம் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் சமீபகாலமாக சில படங்கள் வசூலை கருத்தில் கொண்டு வெள்ளிக் கிழமைக்கு பதிலாக ஒரு நாள் முன்னதாக, அதாவது வியாழக் கிழமைகளில் வெளியாகிறது. அந்த வரிசையில் இப்போது ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படமும் இணையவிருக்கிறது. அதவது 11-ஆம் தேதி, வெள்ளி கிழமை வெளியாகவிருந்த இப்படத்தை 10-ஆம் தேதி வியாழக் கிழமை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். சென்சார் குழுவினரின் பார்வைக்கு சென்ற ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்திற்கு சென்சார் குழுவினரின் க்ளீன் ‘யு’ சர்டிஃபிக்கெடும் வழங்கியிருப்பதால் ‘KIK’ படக்குழுவினர் மேலும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

#KadavulIrukkanKumaru #GVPrakashKumar #RJBalaji #PrakashRaj #MRajesh #AmmaCreations #NikkiGalrani

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;