பல்கேரியா பறக்கவிருக்கும் ‘AK-57’ படக்குழுவினர்!

பல்கேரியாவில் ‘AK-57’ இறுதிகட்ட படப்பிடிப்பு!

செய்திகள் 10-Nov-2016 3:02 PM IST VRC கருத்துக்கள்

‘வேதாளம்’ படத்தை தொடர்ந்து அஜித்தும், சிவாவும் மீண்டும் இணைந்துள்ள அஜித்தின் 57-வது படத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இன்னொரு முக்கிய வேடத்தில் அக்‌ஷரா ஹாசன் நடிக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்தது. இதனை தொடர்ந்து படத்தின் மூன்றாம் கட்டபடப்பிடிப்பு விரைவில் பல்கேரியாவில் தொடர்ந்து 50 நாட்கள் நடக்கவிருக்கிறது. இதற்காக அஜித், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் வில்லனாக நடிக்கும் விவேக் ஓபராய் அடங்கிய படக்குழுவினர் பல்கேரியா செல்லவிருக்கின்றனர். பல்கேரியா நாட்டு படப்பிடிப்புடன் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து விடுமாம். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழுவினர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஜனவரி மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். ‘வேதாளம்’ படத்திற்கு இசை அமைத்த அனிருத்தே இப்படத்திற்கும் இசை அமைக்கிறார்.

#AK57 #AjithKumar #VivekOberoi #SiruthaiSiva #SathyaJothiFilms #TGThiagarajan #KajalAgarwal, #Thala57

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நேர்கொண்ட பார்வை டிரைலர்


;