விஜய்சேதுபதியின் ‘கவண்’ ரிலீஸ் ப்ளான்?

விஜய்சேதுபதியின் ‘கவண்’ ரிலீஸ் எப்போது?

செய்திகள் 10-Nov-2016 3:08 PM IST VRC கருத்துக்கள்

‘அனேகன்’ படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கி வரும் படம் ‘கவண்’. ‘அனேகன்’ படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கிறது. அனைத்து படப்பிடிப்பும் முடிந்த இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. ‘காதலும் கடந்து போகும்’ படத்திற்கு பிறகு விஜய்சேதுபதியும், மடோனா செபாஸ்டியனும் மீண்டும் இணைந்து நடித்துள்ள இப்படத்தை வருகிற ஜனவரி மாதம் 26-ஆம் தேதி அல்லது, ஃபிப்ரவரி 3-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் இசைக்கு ‘ஹிப் பாப் தமிழா’ ஆதியுடன் முதன் முதலாக கை கோர்த்துள்ள கே.வி.ஆனந்த் இப்படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் விஜய டி.ரஜேந்தரையும் நடிக்க வைத்துள்ளார்.

#Anegan #KVAnand #Kavan #VijaySethupathi #MadonaSabastian #HipHopThamizha #TRajender

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;