‘விஐபி-2’ இசை அமைப்பாளர் குழப்பம் முடிவுக்கு வந்தது!

‘விஐபி-2’வில் இணையும் அமலா பால்!

செய்திகள் 11-Nov-2016 11:31 AM IST VRC கருத்துக்கள்

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கவிருக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பில் அனிருத், ஷான் ரோல்டன் என இரண்டு இசை அமைப்பாளர்களின் பெயர்கள் இடைபெற்றிருந்தது. இதனால் இந்த படத்திற்கு இரண்டு பேரும் இணைந்து இசை அமைக்கிறார்களா என்ற ஒரு குழப்பம் நிலவி வந்தது. ஆனால் அந்த குழப்பம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. அதாவது ‘வேலையில்லா பட்டதாரி-2’விற்கு ஷான் ரோல்டன் தான் இசை அமைக்கவிருக்கிறார். ஆனால் இப்படத்தில் அனிருத்தின் ட்யூன்களும் இடம் பெறவிருக்கிறதாம். காரணம் ‘வேலையில்லா பட்டதாரி’ முதல் பாகத்தில் அனிருத்தின் இசை வித்தியாசமாக அமைந்து மிகவும் பேசப்பட்டது. படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இசையும் ஒரு முக்கியகாரணமாக அமைந்தது என்பதால் அப்படத்தில் இடம் பெற்ற சில ட்யூன்களை இரண்டாம் பாகத்திலும் பயன்படுத்த இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்தும், தனுஷும் முடிவு செய்திருக்கிறார்கள்
என்று கூறப்படுகிறது. இதனால் தான் ‘வேலையில்லா பட்டதாரி-2’ விளம்பரத்தில் அனிருத்தின் பெயரும் ஷான் ரோல்டனின் பெயரும் இடம்பெற செய்திருந்தார்களாம்!
இந்த படம் சம்பந்தமாக கூடுதலாக கிடைத்த தகவலின் படி இப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த அமலா பால் இரண்டாம் பாகத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறாராம். தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் ‘வட சென்னை’, பாபி சிம்ஹா நடிப்பில் சுசி கணேசன் இயக்கி வரும் ‘திருட்டுப் பயலே-2’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் அமலா பால்!

என்றும் முதல் பாகத்தில் அனிருத் இசையில் அமைந்த சில பின்னணி ட்யூன்கள் பெரிதும் பேசப்பட்ட்தால் அந்த டியூன்களி மீண்டும் இரண்டாம் பாகத்தில் பயன்படுத்த இருப்பதால் தான் அனிருத்தின் பெயர் அந்த விளம்பரத்தில் இடம்பெற்றிருக்கிறது என்று இப்போது தெரிய வந்துள்ளது. இது சம்பந்தமாக் தனுஷ் அனிருத்திடம் பேசி அனுமதி வாங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனால் ’வேலையில்லா பட்டதாரி’ இரண்டாம் பாகத்திற்கு ஷான் ரோல்டன் தான் இசை அமைப்பாளர் என்பது முடிவாகிவிட்டது. வேலையில்லா பட்டதாரி முதல் பாகத்தில் நடித்த அமலா பால் இரண்டாம் பாகத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால் இவையெல்லாம் அதிகார்பூர்வமான தகவல்கள் இல்லை என்பது குறிப்பிட்த்தக்கது. அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்பட்த்திற்கான மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;