குழந்தைகளுக்கு பாலியல் கல்வி அவசியம்! – ‘சாயா’ விழாவில் நமீதா

ஆத்மா சம்பந்தப்பட்ட படம் ‘சாயா’

செய்திகள் 15-Nov-2016 11:34 AM IST VRC கருத்துக்கள்

‘அம்மா அப்பா சினி பிக்சர்ஸ்’ சார்பில் வி.எச்.பழனிவேல் கதை, திரைக்கதை வசனம், பாடல்கள் எழுதி இயக்கி தயாரித்துள்ள படம் ‘சாயா’. ஏ.சி.ஜான் பீட்டர் இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. பாடல்களை நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட நடிகைகள் நமீதா, வசுந்தரா, ஸ்டன்ட் இயக்குனரும் கில்ட் தலைவருமான ஜாக்குவார் தங்கம் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் நமீதா பேசும்போது, ‘‘சமுதாயத்துக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் திரைப்படம், அரசியல் என்று இரண்டு வழிகள் தான் இருக்கின்றன. அதனால் தான் நான் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறேன். இந்த படம் குழந்தைகளுக்கு பேரண்டிங் பற்றி அதாவது நல்ல பெற்றோராக இருப்பது அவசியம் என்பதை உணர்த்தும் படமாக உருவாகியிருக்கிறது என்று கேள்விப்பட்டேன். எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். ஆம், நான் மூன்று நாய் குட்டிகளை வளர்க்கிறேன். எனக்கு அவங்கதான் குழந்தைகள். என் அண்ணாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களையும் கவனித்து கொள்கிறேன். சமுதாயத்தில் இப்போது குழந்தைகளுக்கு எதிராக பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன. நாம் குழந்தைகளுக்கு நல்ல கல்வி மட்டும் கொடுத்தால் போதாது. எது நல்ல தொடுதல், எது கெட்ட தொடுதல் போன்ற பாலியல் கல்வியையும் சொல்லி கொடுக்க வேண்டும். இந்து அவசியமான ஒன்றாக இருக்கிறது. இதுபோன்ற கருத்துக்களை தாங்கி வரும் இந்த படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்’’ என்றார்.

இதற்கு முன்னதாக படம் பற்றி இயக்குனர் பழனிவேல் பேசும்போது, ‘‘பொதுவாக ஆத்மா சம்பந்தப்பட்ட கதை என்றால் அந்த படம் பயமுறுத்துவதுபோல் தான் இருக்கும். ஆனால் முதன் முறையாக பெற்றோர்களும், குழந்தைகளும் அவசியம் பாரக்க வேண்டிய ஒரு படமாக ஆத்மாவை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளேன். இந்த படம் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாணவர்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
இந்த படத்தில் கதாநாயகனாக சந்தோஷ்குமார் குமார் நடித்துள்ளார். கதாநாயகியாக வசுந்தரா நடித்துள்ளார். இவர்களுடன் ‘பாய்ஸ்’ ராஜன், பாலா சிங், கொட்டாச்சி உட்பட பலர் நடித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆதித்ய வர்மா டீஸர்


;