50 நாட்களில் ஷூட்டிங் ஓவர், இன்றுமுதல் டப்பிங் : ‘பலே’ சசிகுமார்!

சசிகுமார் நடிக்கும் ‘பலே வெள்ளையத் தேவா’ படத்தின் டப்பிங் இன்று துவங்குகிறது

செய்திகள் 16-Nov-2016 11:47 AM IST Chandru கருத்துக்கள்

‘பி அன்ட் சி’யில் கணிசமாக கல்லா கட்டிய ‘கிடாரி’ படத்தைத் தொடர்ந்து சசிகுமார் நடித்திருக்கும் படம் ‘பலே வெள்ளையத் தேவா’. அறிமுக இயக்குனர் சோலை பிரகாஷ் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கிறார். காமெடிப் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் சங்கிலி முருகனும், கோவை சரளாவும் நடித்துள்ளனர். ‘கிடாரி’யைத் தொடர்ந்து இப்படத்திற்கும் ‘டர்புக்கா’ சிவா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு ரவீந்திரநாத் குரு.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் இம்மாதம் 4ஆம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 50 நாட்கள் நடந்த படப்பிடிப்பு கடந்த 10ஆம் தேதியோடு நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து இன்றுமுதல் இப்படத்தின் டப்பிங்கும் துவங்கியுள்ளதாக நடிகர் சசிகுமார் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஜெட் வேகத்தில் உருவாகிவரும் இப்படம் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே வெளியானாலும் ஆச்சரியமில்லை என்கிறது படக்குழு.

#BalleVellaiyathevaa #Sasikumar #Kidaari #SolaiPrakash #DhanyaRavichandran #KovaiSarala #DarbugaSiva

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;