மீண்டும் ‘கொடி’ இயக்குனருடன் தனுஷ்?

ரஜினிகாந்தின் அறிவுரையின்படி ‘கொடி’ இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவிருக்கிறாராம் தனுஷ்

செய்திகள் 17-Nov-2016 11:56 AM IST Chandru கருத்துக்கள்

‘எதிர்நீச்சல்’ மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கிய ஆர்.எஸ்.துரை செந்தில்குமார், இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனை நாயகனாக்கி ‘காக்கி சட்டை’ படத்தை இயக்கினார். தற்போது அவர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்திருக்கும் ‘கொடி’ திரைப்படம் திரையரங்குகளில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. ‘வேலையில்லா பட்டதாரி’ படத்திற்குப் பிறகு தனுஷிற்கு ஹிட் படமாக ‘கொடி’ அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வந்த ‘கொடி’ படத்தை சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி பார்த்து மகிழ்ந்தாராம். தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இப்படம் ரஜினிக்கு மிகவும் பிடிக்கவே, தனுஷிடம் மீண்டும் அதே இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கச் சொல்லி அறிவுறுத்தினாராம். இதனால், உடனடியாக ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறாராம் தனுஷ்.

#Dhanush #Kodi #DuraiSenthilkumar #Rajinikanth #Trisha #SanthoshNarayanan #WunderbarFilms #VIP2

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;