‘சைத்தான்’ போஸ்டரில் இடம்பெற்ற எழுத்தாளர் சுஜாதா!

‘சைத்தான்’ படத்தின் மீது எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து படத்தின் போஸ்டரில் எழுத்தாளர் சுஜாதா பெயர் இடம்பெற்றுள்ளது

செய்திகள் 21-Nov-2016 10:42 AM IST Chandru கருத்துக்கள்

‘பிச்சைகாரன்’ வெற்றிக்குப் பிறகு பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ‘சைத்தான்’ படத்தில் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. வழக்கமாக ஒரு படத்தின் டீஸர் வெளியீட்டிற்குப் பிறகு, அப்படத்தின் 2 நிமிட டிரைலர்தான் வெளியிடப்படும். ஆனால், வித்தியாசமாக ‘சைத்தான்’ படத்தின் முதல் 10 நிமிடங்களை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தினார் விஜய் ஆண்டனி. ஆனால், இதனாலேயே சில குழப்பங்களும், விமர்சனங்களும் இப்படத்தின் மீது எழுந்தன. ‘சைத்தான்’ படத்தின் மையக்கதை எழுத்தாளர் சுஜாதா எழுதிய ‘ஆ....’ என்ற த்ரில்லர் நாவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதற்குக் காரணம், எழுத்தாளர் சுஜாதாவிற்கு ‘சைத்தான்’ படக்குழு முறையான கிரெடிட் வழங்கவில்லை என்பதுதான். இதனை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் சுஜாதாவின் ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது வெளியிடப்பட்டுள்ள ‘சைத்தான்’ படத்தின் புதிய போஸ்டரில் சுஜாதாவின் பெயரை இடம்பெறச் செய்து, விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

#Sujatha #Saithan #VijayAntony #Aa #PradeepKrishnamoorthy #AuraaCinemas #ArundathiNair #YGeeMahendiran

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;