‘அறம்’ முடித்த கையோடு ‘இமைக்கா நொடிகளி’ல் இணைந்த நயன்தாரா!

‘அறம்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு அதர்வாவின் இமைக்கா நொடிகளில் களமிறங்கிய நயன்தாரா!

செய்திகள் 7-Dec-2016 3:14 PM IST VRC கருத்துக்கள்

கோபி நயனார் இயக்கத்தில் நயன்தாரா கலெக்டராக நடிக்கும் படம் ‘அறம்’. இப்படத்தில் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாம்! இந்த படத்திற்காக நயன்தாரா 25 நாட்கள் ஒதுக்கியிருந்தாராம். ‘அறம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை தொடர்ந்து நயன்தாரா தற்போது பெங்களூரில் நடைபெற்று வரும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். அங்கு ‘இமைக்கா நொடிகளி’ன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிற நேரத்தில் தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்த செய்தியை அறிந்துள்ளார் நயன்தாரா! உடனே படப்பிடிப்புக்கு பிரேக் விட்டு சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் பெங்களூர் திரும்பியுள்ளார் நயன்தாரா! அதர்வா, ராஷி கண்ணா, அனுராக் காஷ்யாப் ஆகியோரும் நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை ‘டிமாண்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார்.

#Nayanthara #MinjurGopi #Aram #ImaikkaNodigal #RaashiKhanna #AnuragKashyap #Nayan #Jayalalitha #ChiefMinister

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;