தொண்டனாக களமிறங்கும் சமுத்திரகனி!

’அப்பா’வை தொடர்ந்து சமுத்திரகனி நடித்து, இயக்கி, தயாரிக்கும் ’தொண்டன்’

செய்திகள் 10-Dec-2016 1:13 PM IST VRC கருத்துக்கள்

‘ஜெயம்’ ரவியை வைத்து ‘நிமிர்ந்து நில்’ படத்தை இயக்கிய சமுத்திரகனி மீண்டும் ‘ஜெயம்’ ரவியை வைத்து ‘தொண்டன்’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவலை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். ஆனால் இந்த படம் குறித்து இப்போது வெளியாகியுள்ள அதிகாரபூர்வமான தகவல்களில் இப்படத்தில் சமுத்திரகனியே கதாநாயகனாக நடித்து, இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த படத்தை சமுத்திரகனியின் நாடோடிகள் நிறுவனமும், வசுந்தரா தேவி சினி ஃபிலிம்ஸும் இணைந்து தயாரிக்கிறது. சமீபத்தில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’, ‘கிடாரி’ ஆகிய படங்களை தொடர்ந்து சசிகுமாரின் ‘பலே வெள்ளையத் தேவா’ படத்தை தமிழகமெங்கும் வெளியிடவிருக்கும் நிறுவனம் ‘வசுந்தரா தேவி சினி ஃபிலிம்ஸ்’ என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சமுத்திரகனியுடன் விக்ராந்த், நமோ நாராயணன், தம்பி ராமையா, சூரி, கஞ்சா கருப்பு, ‘பிச்சைக்காரன்’ படப் புகழ் மூர்த்தி ஆகியோரும் நடிக்கின்றனர்.

‘அப்பா’ படத்தை தொடர்ந்து சமுத்திரகனி இயக்கி, தயாரித்து, நடிக்கும் தொண்டனின் படப்பிடிப்பு வருகிற 16-ஆம் தேதி நெய்வெலியில் துவங்கவிருக்கிறது. இப்படத்தின் ஒளிப்பதிவு பணியை ரிச்சர்ட் எம்.நாதன் ஏற்றிருக்கிறார். ஜஸ்டின் பிரபாகர்ன் இசை அமைக்கிறார். கலை இயக்கத்தை ஜாக்கி கவனிக்கிறார். ஏ.எல்.ரமேஷ் படத்தொகுப்பு செய்கிறார்.

#Thondan #Samuthirakani #Appa #Sasikumar #Soori #ThambiRamaiah #JayamRavi #Naadodigal Production

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;