ஆட்டோவுக்கு அனுமதி - தியேட்டர் உரிமையாளர்களிடம் விஷால் வேண்டுகோள்!

கத்திசண்டை - தியேட்டருக்குள் ஆட்டோக்களை அனுமதிக்க நடிகர் விஷால் வேண்டுகோள்!

செய்திகள் 21-Dec-2016 2:59 PM IST Top 10 கருத்துக்கள்

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி முதலானோர் நடித்துள்ள ‘கத்திசண்டை’ திரைப்படம் நாளை மறுநாள் (23-12-16) உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. இதனையொட்டி நடந்த இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஷால் பேசும்போது,
‘‘முன்பெல்லாம் திரையரங்குகளில் அதிகமாக ஆட்டோக்காரர்கள் தான் முதல் காட்சி பார்ப்பார்கள்! அவர்கள் படம் பார்த்துவிட்டு தங்கள் நண்பர்களிடமும், தங்களது ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளிடமும் படம் நன்றாக இருக்கிறது, தியேட்டருக்கு சென்று பாருங்கள் என்று சொல்வார்கள். அதை கேட்டு தியேட்டருக்கு மக்கள் கூட்டமும் வரும். படமும் நன்றாக போகும். ஆனால் இப்போது பெரும்பாலான தியேட்டர் வளாகத்திற்குள் ஆட்டோக்களை அனுமதிப்பதில்லை. இதனால் நிறைய பேர் முதல் காட்சியை பார்க்க வருதில்லை! ஆனால் இந்த ‘கத்திசண்டை’ படம் மூலம் அதற்கு ஒரு விடிவுகாலம் பிறக்க உள்ளது. நான், இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால், இப்படத்தை வெளியிடும் ‘கேமியோ ஃபிலிம்ஸ்’ ஜெயகுமார், இயக்குனர் சுராஜ் ஆகியோர் இணைந்து திரையரங்க உரிமையாளர்களிடம் ‘கத்திசண்டை’ படத்திற்கு ஆட்டோக்களை தியேட்டருக்குள் அனுமதிக்குமாறு பேசி வருகிறோம். நிச்சயம் இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் சம்மதிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது’’ என்றார்.

#KaththiSandai #Vishal #Vadivel #Tammanah #Soori #Suraj

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;