சீனுராமசாமி இயக்கத்தில் 3 படங்களை தவறவிட்ட இனிகோ பிரபாகர்!

இனிகோ பிரபாகர் நடிக்கும் ‘வீரையன்’ - 1990 காலகட்டத்து கதை!

செய்திகள் 2-Jan-2017 12:59 PM IST VRC கருத்துக்கள்

‘ஃபாரா சாரா ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.பரீத் இயக்கி தயாரித்திருக்கும் படம் ‘வீரையன்’. இப்படத்தில் இனிகோ பிரபாகர் கதாநாயகனாகவும் ‘இந்தியா பாகிஸ்தான்’ டத்தில் நடித்த ஷைனி கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ‘ஆடுகளம்’ நரேன், வேலா ராமமூர்த்தி, பிரதீஷா, வசந்த், வின்சென்ட் ஆகியோரும் நடிக்கம் எஸ்.என்.அருணகிரி இசை அமைத்துள்ளார். பி.வி.முருகேஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது.

விழாவில் இயக்குனர் சீனுராமசாமி பேசும்போது, ‘‘இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் இனிகோ பிரபாகரை பல ஆண்டுகளாக எனக்கு தெரியும். இப்போது தமிழ் சினிமாவில் உள்ள அத்தனை கதாநாயக நடிகர்களுக்கும் திறமையில் நிகரானவர் இனிகோ பிரபாகர். எதிர் காலத்தில் அவரை வைத்து நானும் படம் பண்ணுவேன்’’ என்றார்.

இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் பேசும்போது, ‘‘இப்படத்தை இயக்கியிருக்கும் பரீத், கதாநாயகனாக நடித்திருக்கும் இனிகோ பிரபாகர் ஆகியோரை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். சினிமாவில் ஜெயிப்பவர்கள் எல்லோரும் வலிகளை படிகளாக்கி முன்னேறியவர்கள் தான். அவர்களை போல இவர்களும் பல வலிகளை அனுபவித்துள்ளனர். இவர்களும் சினிமாவில் நிச்சயம் ஜெயிப்பார்கள்’’ என்றார்.

படத்தின் கதாநாயகன் இனிகோ பிரபாகர் பேசும்போது ‘‘இந்த வருடத்தின் முதல் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி இது. இப்படத்தின் அனைத்து பாடல்களும் இந்த வருடத்தின் ‘டாப் 10’-ல் இடம் பெறும் என்பது என் நம்பிக்கை! அந்த வகையில் இப்படத்தின் பாடல்களை உருவாக்கியுள்ளார் இசை அமைப்பாளர் அருணகிரி. இங்கு பேசிய இயக்குனர் சீனுராமசாமி அண்ணனுடன் எனக்கிருக்கும் நட்பை பற்றி சொல்லியே ஆக வேண்டும். அவர் இயக்கிய ‘தென்மேற்கு பருவ காற்று’ படத்தில் ஹீரோவாக நடிக்க என்னை தான் அவர் முதலில் அழைத்தார். ஆனால் அப்போது நான் வேறு படங்களில் கமிட் ஆகியிருந்ததால் என்னால் நடிக்க முடியவில்லை. அதற்கு அடுத்து அவர் இயக்கிய ‘நீர்பறவை’ படத்தில் நடிக்கவும் அழைத்தார். அப்போதும் என்னால் நடிக்க முடியவில்லை. அதன் பிறகு அவர் இயக்கிய ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் நடிக்கவும் அழைத்திருந்தார். அப்படத்திலும் நடிக்க முடியாமல் போய் விட்டது. இந்த படங்களை தவறவிட்டது எனக்கு பெரிய வருத்தம் தான். ஆனால் கண்டிப்பாக சீனுராமசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. இங்கு என்னை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி’’ என்றார்

இயக்குனர் சற்குணம் பேசும்போது, ‘‘இந்த படத்தின் கதை எனக்கு தெரியும். 1990 காலகட்டத்தில் நடப்பது மாதிரியான இயல்பான ஒரு கிராமத்து கதை. இந்த கதையில் இனிகோ பிரபாகர் தான் ஹீரோவாக நடிக்கிறார் என்று பரீத் சொன்னதும் அவர் ரொம்பவும் இயல்பான நடிகர், கதைக்கு ரொம்பவும் பொருத்தமாக இருப்பார் என்று சொன்னேன். இந்த காலத்தில் யார் நிஜமான கலைஞ்ரகள், யாரை பாராட்ட வேண்டும் என்றால் சொந்த பணத்தில் படத்தை இயக்குவர்களை, நடிப்பவர்களை தான் பாராட்ட வேண்டும். ஏன் என்றால் நிஜமாக சினிமாவை நேசிப்பவர்கள் அவர்கள் தான். அந்த வரிசையில் இப்படத்தின் இயக்குனர் பரீத், கதாநாயகனாக நடித்திருக்கும் இனிகோ பிரபாகர் ஆகியோர் பாராட்டுக்குரியவர்களே!’’ என்றார்.

இவர்கள் தவிர விழால் இயக்குனர் தங்கசாமி. ஜாக்குவார் தங்க்ம். எஸ்.பி.பி.சரண், ஒளிப்பதிவாலர் எம்.எஸ்.பிரபு, தயாரிப்பாள் நசீர் ஆடுகளம் நரேன் முதலானோரும் பேசினார்கள்.

வீரையன் படத்தின் ஒளிப்பதிவை பி.வி.முருகேஷ்வா கவனித்துள்ளார்.

#Veeraiyan #SeenuRamasamy #InicoPrabhakar #SFarith #Shinee #VelaRamamoorthy #SNArunagiri #SRPrabhakaran

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வீரையன் - டிரைலர்


;