சீனுராமசாமியின் ‘மாமனிதன்’

’தர்மதுரை’யை தொடர்ந்து சீனுராமசாமி இயக்கும் மாமனிதன்!

செய்திகள் 2-Jan-2017 3:01 PM IST VRC கருத்துக்கள்

சீனுராமசாமி இயக்கத்தில், விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே முதலானோர் நடித்து 100 நாட்கள் ஓடி வெற்றிபெற்ற படம் ‘தர்மதுரை’. ஸ்டுடியோ-9 நிறுவனம் சார்பில் ஆர்.கே.சுரேஷ் தயாரித்த இப்படம் 100 நாட்கள் ஓடியதை தொடர்ந்து இப்படத்தின் 100-வது நாள் விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படத்தில் நடித்த நடிகர் நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு கேடங்கள் வழங்கப்பட்டன. இந்த படத்தை தொடர்ந்து சீனுராமசாமி ‘மாமனிதன்’ என்ற படத்தை இயக்குகிறார். இந்த படம் சீனுராமசாமிக்கு ‘தர்மதுரை’ படம் மூலம் கிடைத்த வாய்ப்பாம்! நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களையும், அவர்களுடைய பண்புகளையும் சொல்லும் படமாம் இது! தற்போது இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வில் பிசியாக இருக்கிறார் சீனுராமசாமி!

#Seenuramasamy #Maamanithan #Dharmadurai #VijaySethupathi #Tamannah #Studio9Suresh #IdamPorulEval

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;