‘கர்ஜனை’க்காக சண்டை பயிற்சி எடுக்கும் த்ரிஷா!

த்ரிஷா நடிக்கும் ‘கர்ஜனை’  ஹிந்தி ‘NH-10’ ரீ-மேக் இல்லையாம்!

செய்திகள் 11-Jan-2017 11:08 AM IST VRC கருத்துக்கள்

கதாநாயகி கேரக்டருக்கு முக்கியத்துவமுள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் த்ரிஷாவின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கர்ஜனை’. சுந்தர் பாலு இயக்கி வரும் இப்படம் ஹிந்தியில் வெளியான ‘NH-10’ படத்தின் ரீ-மேக் என்று முதலில் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் இந்த தகவல்களை ‘கர்ஜனை’ படக்குழுவினர் மறுத்துள்ளனர். ‘கர்ஜனை’ வட இந்தியாவில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள கதையாம்! இந்த கதையில் த்ரிஷா ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவமுள்ள கேரக்டரில் நடிக்கிறார். இதற்காக ‘கோலிசோடா’, ’பத்து எண்றதுக்குள்ள’ போன்ற படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராக பணிபுரிந்த சுப்ரீம் சுந்தரிடம், த்ரிஷா சண்டை பயிற்சி எடுத்து வருகிறார். சமீபத்தில் வெளியான ’கொடி’யில் த்ரிஷா மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். அதைப் போல கர்ஜனை கேரக்டரும் அமையும் என்கிறார்கள். ‘கர்ஜனை’யில் அமித் பார்கவ் த்ரிஷாவின் பாய் ஃப்ரெண்டாக நடிக்கிறார். சென்ற 9-ஆம் தேதி துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.

#TrishaKrishnan #Garjanai #AnushkaSharma #NH10 #Trisha #SupremeSundar #Kodi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பரமபதம் விளையாட்டு - ட்ரைலர்


;