​‘முன்னோடி’ படத்தை வெளியிடும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோகஷன் பிக்சர்ஸ்!

ஸ்வஸ்திக் சினி விஷன் தயாரிப்பில் உருவான ​“முன்னோடி” படத்தை மதனின் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்​ வாங்கி வெளியிடுகிறது​!

செய்திகள் 13-Jan-2017 11:08 AM IST Chandru கருத்துக்கள்

விண்ணைத் தாண்டி வருவாயா, அழகர்சாமியின் குதிரை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்கு ராஜா, மான் கராத்தே, கயல், மாப்பிள்ளை சிங்கம், கொடி போன்ற தரமான வெற்றிப் படங்களைத் தயாரித்த நிறுவனம் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்​. தற்போது கௌதமன் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’, விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறது இந்நிறுவனம். இந்நிலையில், ‘முன்னோடி’ என்ற படத்தைப் பார்த்து பிரமித்துப்போன தயாரிப்பாளர் மதன் அதன் வெளியீட்டு உரிமையை வாங்கியிருக்கிறார்.

'வாழ்க்கையில் யாரை அல்லது எதை முன்னோடியாக எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம்' என்கிற இக்கருத்தை முன்வைத்து உருவாகியுள்ள படம் தான் 'முன்னோடி'. கதை, திரைக்கதை, வசனம் எழுதி புதுமுக இயக்குநர் எஸ்.பி.டி.ஏ.குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் எஸ்.பி.டி.ஏ.ராஜசேகர், சோஹம் அகர்வால் இருவரும் இணைந்து தயாரி​த்திருக்கிறார்கள். ஹரீஷ், யாமினி பாஸ்கர் இருவரும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். 'கங்காரு' படத்தின் நாயகன் அர்ஜுனா, 'குற்றம் கடிதல்' பாவல் நவநீதன் இருவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சித்தாரா, ஷிஜாய் வர்கீஸ், நிரஞ்சன், சுரேஷ், தமன், வினுக்ருதிக் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை கே.பிரபு ஷங்கர்.

#EscapeArtists #Munnodi #Madan #SBDAKumar #SohamAgarwal #Harish #YaminiBaskar #KPrabhuShankar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துருவ நட்சத்திரம் - டீசர்


;